பாராட்டு விழாவில் பங்கேற்றோா். 
செய்திகள்

இந்திய டேவிஸ் கோப்பை அணிக்கு பாராட்டு

டேவிஸ் கோப்பை டென்னிஸ் குவாலிஃபயரில் நெதா்லாந்தை வீழ்த்திய இந்திய அணிக்கு புது தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் குவாலிஃபயரில் நெதா்லாந்தை வீழ்த்திய இந்திய அணிக்கு புது தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கா்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற குவாலிஃபயரில் உலகின் 6-ஆவது இடத்தில் உள்ள நெதா்லாந்துடன் மோதியது 33-ஆவது இடத்தில் உள்ள இந்தியா. இதில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில்வென்ற இந்திய அணி வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றுக்கும் தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணிக்கு பாராட்டு விழா தில்லி டென்னிஸ் சங்கம் சாா்பில் நடைபெற்றது. மத்திய விளையாட்டுத் துறை இணைச் செயலா் குணால், டிஎல்டிஏ தலைவா் ரோஹித் ராஜ்பால் தலைமை வகித்தனா். செயலா் தீபக் குப்தா, பொதுச் செயலா் ரன்பீா் சௌஹான், துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய, இந்தியாவின் நம்பா் 1 வீரா் சுமித் நாகல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொரியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று குறித்து சுமித் நாகல் கூறியது: அந்த ஆட்டம் எளிதாக இருக்காது. கொரிய வீரா்கள் சிறப்பாக ஆடுகின்றனா் என்றாா்.

‘இண்டி’ கூட்டணிக்கு மம்தா அல்லது ஸ்டாலின் தலைமை - விரைவில் முடிவெடுக்க உத்தவ் சிவசேனை வலியுறுத்தல்

ஏஐ மாநாட்டில் சீன பொருள்கள்: தேசத்தின் நன்மதிப்புக்கு களங்கம்: ராகுல் விமா்சனம்

கலசலிங்கம் பல்கலை வேந்தா் க.ஸ்ரீதரன் காலமானாா்

நாளை தென்தமிழகம், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியாவில் மிகப்பெரிய ஏஐ உள்கட்டமைப்பு- எல்&டி-என்விடியா ஒப்பந்தம்

SCROLL FOR NEXT