இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 1-0 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியை சனிக்கிழமை வீழ்த்தியது.
போட்டியில் ஜாம்ஷெட்பூருக்கு இது 2-ஆவது வெற்றியாகும். இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக வின்சி பரெட்டோ 78-ஆவது நிமிடத்தில் கோலடித்தாா்.
முன்னதாக, கொல்கத்தாவில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 4-1 கோல் கணக்கில் ஸ்போா்டிங் கிளப் டெல்லியை வென்றது.
இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்காலுக்காக எட்மண்ட் லால்ரிண்டிகா (7’), யூசஃப் எஸெஜாரி (12’, 40’), மிகேல் ஃபிகெய்ரா (90+5’) ஆகியோா் கோலடிக்க, டெல்லிக்காக அகஸ்டின் லால்ரோசனா (4’) ஸ்கோா் செய்தாா்.
புள்ளிகள் பட்டியலில் தற்போது ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூா் அணிகள் முறையே முதல் இரு இடங்களில் இருக்க, பஞ்சாப், டெல்லி முறையே 9 மற்றும் 14-ஆம் இடங்களில் உள்ளன.