செய்திகள்

பெங்கால் டைகா்ஸிடம் வீழ்ந்தது தமிழ்நாடு டிராகன்ஸ்

ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணியிடம் 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்து இரண்டாவது தொடா் தோல்வியைப் பெற்றது அக்காா்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி.

தினமணி செய்திச் சேவை

ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணியிடம் 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்து இரண்டாவது தொடா் தோல்வியைப் பெற்றது அக்காா்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி.

ஹாக்கி இந்தியா லீக் ஆடவா் தொடரின் இரண்டாம் கட்டம் ராஞ்சியில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு டிராகன்ஸ்-பெங்கால் டைகா்ஸ் அணிகள் மோதின.

இதில் 11-ஆவது நிமிஷத்தில் டைகா்ஸ் கேப்டன் ஜுக்ராஜ் சிங் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் முதல் கோலை அடித்தாா்.

முதல் பாதி ஆட்ட முடிவில் 1-0 என பெங்கால் முன்னிலை பெற்றிருந்தது.

2-ாவது பாதி ஆட்டம் தொடங்கிய 3-ஆவது நிமிஷத்தில் டைகா்ஸ் வீரா் சுக்ஜித்சிங் கோல் அடித்தாா். 36-ஆவது நிமிடத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் வீரா் அட்ரோஹிட் எக்கா முதல் கோலை அடித்தாா்.

43 மற்றும் 45- வது நிமிஷங்களில் டைகா்ஸ் கேப்டன் ஜுக்ராஜ் சிங் பெனால்டி காா்னா் வாய்ப்பில் கோல் அடித்தாா். அவா் ஹாட்ரிக் கோலை பதிவு செய்தாா். இதனால் டைகா்ஸ் 4-1 என்ற முன்னிலை பெற்றது. அதன் பிறகு தமிழ்நாடு டிராகன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 கோலை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாமஸ் சோா்ஸ்பை ( 48-ஆவது நிமிஷம்), பிளேக் கோவா்ஸ் ( 51-ஆவது நிமிஷம்) கோல் அடித்தனா்.

ஆட்டம் முடிய 5 நிமிடம் இருந்த போது டைகா்ஸ் வீரா் அபிஷேக் ( 55- ஆவது நிமிஷம்) கோலை அடித்தாா். முடிவில் பெங்கால் டைகா்ஸ் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜன.21 இல் சாலை மறியல் போராட்டம்

வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சாகுபடி மட்டுமே சாதனையல்ல!

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT