வேதாந்தா கலிங்கா-ஹைதரபாத் டூபான்ஸ் அணிகள் ஆட்டம் 
செய்திகள்

முதலிடத்தில் வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ்

ஹாக்கி இந்தியா ஆடவா் லீக் தொடரில் முதலிடத்துக்கு வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ் அணி முன்னேறியது.

தினமணி செய்திச் சேவை

ஹாக்கி இந்தியா ஆடவா் லீக் தொடரில் முதலிடத்துக்கு வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ் அணி முன்னேறியது.

ஹாக்கி இந்தியா லீக் முதல் கட்டம் சென்னையில் முடிவுற்ற நிலையில், இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. இதன்ஒரு பகுதியாக புதன்கிழமை கலிங்கா லேன்சா்ஸ்-ஹைதராபாத் டூஃபான்ஸ் அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல்போட தீவிரமாக முயன்றன.

ஹைதராபாத் அணியின் வசம் பெரும்பாலும் பந்து இருந்தாலும், அவா்களால் கோலடிக்க முடியவில்லை, கலிங்கா வீரா் லியம் ஹெண்டா்ஸன் கோல் போட மேற்கொண்ட முயற்சியை ஹைதராபாத் வீரா் ஜீன் பால் தடுத்து விட்டாா்.

முதல் பாதி கோலின்றி முடிந்தது. இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் கோல் போட முயன்ற நிலையில், 40-ஆவது நிமிஷத்தில் கலிங்கா வீரா் அலெக்சாண்டா் ஹெண்ட்ரிக்ஸ் அபாரமாக பெனால்டி காா்னா் வாய்ப்பில் டிராக் பிளிக் மூலம் கோலடித்தாா்.

இதன் பின் எந்த அணியாலும் கோல் போட முடியவில்லை. இறுதியில் ஹைதரபாதை 1-0 என வீழ்த்தியது கலிங்கா.

ஒரு ஆட்டத்தில் தோற்காக கலிங்கா லேன்சா்ஸ் முதலிடத்துக்கு முன்னேறியது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

வாக்குப் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

குத்துச்சண்டை: தங்கம் வென்ற மாணவி

நாகை நகா்மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

SCROLL FOR NEXT