லிவர்பூல், பார்சிலோனா, செல்ஸி, நபோலி அணி வீரர்கள்.  படங்கள்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்.
செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்: அடுத்த சுற்றுக்குத் தேர்வான, வெளியேறிய அணிகளின் விவரங்கள்!

சாம்பியன்ஸ் லீக்கின் முதல் கட்ட போட்டிகளின் முடிவுகள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஐரோப்பாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக்கில் முதல் கட்ட போட்டிகளின் முடிவினால் டாப் 8, டாப் 24 அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

சாம்பியன்ஸ் லீக்கில் ஆதிக்கம் செலுத்திய ரியல் மாட்ரிட் அணியும் நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி அணியும் டாப் 8-ல் இடம் பிடிக்காதது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக்கின் முதல்கட்ட போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதில் டாப் 8 அணிகள் நேரடியாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

புள்ளிப் பட்டியலில் 9-24 இடங்களில் உள்ள 16 அணிகள் பிளே-ஆஃப்ஸ் போட்டிகளில் விளையாடி வெல்லும் 8 அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குச் செல்லும்.

புள்ளிப் பட்டியலில் கடைசி 12 அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து வெளியேறின.

டாப் 8 ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வான அணிகள்

1. ஆர்செனல் எஃப்சி

2. பெயர்ன் மியூனிக்

3. லிவர்பூல் எஃப்சி

4. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

5. எஃப்சி பார்சிலோனா

6. செல்ஸி எஃப்சி

7. ஸ்போர்டிங் எஃப்சி

8. மான்செஸ்டர் சிட்டி

டாப் 9-24: பிளே ஆப்ஸுக்குத் தேர்வான 16 அணிகள்

09. ரியல் மாட்ரிட்

10. இன்டர் மிலான்

11. பிஎஸ்ஜி

12. நியூ கேஸில்

13. ஜுவெந்தஸ்

14. அத்லெடிகோ மாட்ரிட்

15. அட்லாண்டா

16. லெவர்குசன்

17. டோர்மண்ட்

18. ஒலிம்பியாகோஸ்

19. கிளப் ப்ரூஜ் 

20. கலாட்டாசராய்

21. மொனாக்கோ

22. கராபாக் எஃப்சி

23. போடோ/க்ளிம்ட்

24. பென்ஃபிகா

கடைசி 12 (25-36) : வெளியேறிய அணிகள்

மார்சேய், பாஃபோஸ், யூனியன் செயிண்ட்-கில்லோயிஸ், பிஎஸ்வி ஐன்ட்ஹோவன், அத்லெட்டிக் பில்பாவோ, நபோலி, எஃப்சி கோபன்ஹேகன், அஜாக்ஸ், ஐன்ட்ராக்ட் பிராங்க்ஃபர்ட், ஸ்லாவியா ப்ராக், வில்லாரியல், கைராட்.

கடைசி ஆட்டங்களில் லிவர்பூல், பார்சிலோனா அணிகள் சிறப்பாக விளையாடின.

15 முறை கோப்பை வென்ற ரியல் மாட்ரிட் அணியின் போட்டிதான் மிகவும் சுவாரசியமாக இருந்தது. பென்ஃபிகா அணியின் ஆட்டம் பலரையும் வியக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்மூர்த்திகள் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்!

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

SCROLL FOR NEXT