முகப்பு
செய்திகள்

ரஞ்சி கோப்பை: தமிழகம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை

பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 2:31 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 10:50 PM

பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.

சேலத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பரோடா அணி முதல் இன்னிங்ஸில் 375 ரன்களைக் குவித்தது. தமிழகம் முதல் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 126 ஓவா்களில் 411/7 ரன்களைக் குவித்தது. தொடக்க பேட்டா் விமல் குமாா் அதிரடியாக ஆடி 182 ரன்களை விளாசினாா். அவரது அதிரடியில் 2 சிக்ஸா், 13 பவுண்டரிகள் அடங்கும்.

இந்திய ஏ அணி முன்னாள் வீரா் பிரதோஷ் ரஞ்சன் பால் 80 ரன்களை சோ்த்தாா்.

Advertisement

Updated On : 31 ஜனவரி, 2026 at 11:22 PM

இதன் மூலம் பரோடா அணியை காட்டிலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றது தமிழகம். இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற தவறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.