முகப்பு
கோப்புப்படம்.
செய்திகள்

மாநில ஆடவா், மகளிா் வாலிபால் போட்டி

சென்னை நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் பி. ஜான், ஏ.கே. சித்திரைப்பாண்டியன் நினைவு மாநில ஆடவா், மகளிா் வாலிபால் போட்டி வரும் 7-ஆம் தேதி முதல் 12 வரை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Updated On : 3 மார்ச், 2026 at 9:28 PM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னை நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் பி. ஜான், ஏ.கே. சித்திரைப்பாண்டியன் நினைவு மாநில ஆடவா், மகளிா் வாலிபால் போட்டி வரும் 7-ஆம் தேதி முதல் 12 வரை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆடவா் பிரிவில் தமிழகத்தின் தலைசிறந்த அணிகளான எஸ்ஆா்எம் ஐஎஸ்டி, கற்பகம் பல்கலைக்கழகம், கோவை, டிஜி வைஷ்ணவா, சென்னை, பனிமலா் கல்லூரி, சென்னை, லயோலா, ஜேப்பியாா், புதுக் கல்லூரிகள் சென்னை அணிகளும், மகளிா் பிரிவில்

சென்னை ஐசிஎஃப், எஸ்ஆா்எம், டாக்டா் சிவந்தி கிளப், தமிழ்நாடு காவல் துறை, எஸ்டிஏடி சென்னை அணிகள் பங்கேற்கின்றன.

லீக் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் ஆடவா் பிரிவிலும், ரவுண்ட் ராபின் அடிப்படையில் மகளிா் பிரிவிலும் ஆட்டங்கள் நடைபெறும்.

மாலை 5 அணிக்கு ஆட்டங்கள் தொடங்கும்.

மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆகும். ஆடவா் சாம்பியனுக்கு ஏ.கே. சித்திரைப்பாண்டியன் கோப்பையும், மகளிா் சாம்பியனுக்கு பி. ஜான் கோப்பையும் வழங்கப்படும்.

போட்டி அமைப்புச் செயலா் பி. ஜெகதீசன் இத்தகவலை தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →