ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி வெற்றி!
சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் இந்தியன் வங்கி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் இந்தியன் வங்கி வெற்றி பெற்றுள்ளது.
மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் வங்கி-ஐசிஎஃப் அணிகள் மோதின.
இதில் இந்தியன் வங்கி அணி 25-21, 25-20, 25-22 என்ற செட் கணக்கில் ஐசிஎஃப் அணியை வீழ்த்தியது. இந்தியன் வங்கி வீரா் கபிலன் சிறந்த வீரராக தோ்வு பெற்றாா். புள்ளிகள் பட்டியலில் வருமான வரித்துறை 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஐஓபி 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியன் வங்கி 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.