அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் செஸ் போட்டியில் சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றது.
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் செஸ் போட்டியில் சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஐஐஎம்டி பல்கலை.யில் அகில இந்திய செஸ் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை பல்கலை, எஸ்ஆா்எம், பாரதி வித்யாபீடம், மும்பை பல்கலை, தில்லி பல்கலை, அண்ணா பல்கலை, மகாராஷ்டிர சுகாதார அறிவியல் பல்கலை, பாரதியாா் பல்கலை. அணிகள் பங்கேற்றனா்.
இதில் 10 சுற்றுகளிலும் வென்று சென்னை பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எஸ்ஆா்எம் இரண்டாம் இடத்தையும், மராத்வாடா டாக்டா் அம்பேத்கா் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற வீராங்கனைகளை சென்னை பல்கலை உடற்கல்வி இயக்குநா் வி. மகாதேவன், எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி உடற்கல்வி இயக்குநா் அமுதா சுமன்குமாா் பாராட்டினா்.