ஷுப்மன் கில் சதம் விளாசல்! இறுதிப்போட்டியில் ஆர்சிபியை சந்திக்கும் குஜராத்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி..
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு குஜராத் அணி முன்னேறியது. இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் குஜராத் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் சாய் கிஷோர் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க பேட்டர்களாக ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் வெளியேற மறுபுறம் சூர்யவன்ஷி ஆட்டத்தில் அனல் பறந்தது.
Advertisement
Advertisement
அவரைக் குஜராத் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிரடியாக விளையாடிய அவர் நூலிழையில் தனது சதத்தை தவறவிட்டார். 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 சிக்ஸர்கள் அடங்கும். அடுத்து வந்த வீரர்களில் ஜடேஜா, டோனவன் ஃபெரீரா ஆகியோர் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி ஆடினர்.
ஜடேஜா 45 (35 பந்துகள்) ரன்களுடனும், ஃபெரீரா 38 (11 பந்துகள்) ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் ரபாடா, ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 167 ரன்கள் சேர்த்த நிலையில், சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட் கொடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 53 பந்துகளில் சதம் கடந்து 104 ரன்களை விளாசினார்.