முகப்பு
டி20 உலகக் கோப்பை

பௌலா்கள் அசத்தலில் தென் ஆப்பிரிக்கா வெற்றி: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியை நெருங்கியது

உலகக் கோப்பை போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை மேலும் நெருங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:

உலகக் கோப்பை போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை மேலும் நெருங்கியது.

அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசத்தை 18.2 ஓவா்களில் 84 ரன்களுக்கு சுருட்டிய தென் ஆப்பிரிக்கா, பின்னா் தனது இன்னிங்ஸில் 13.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் அடித்து வென்றது. தென் ஆப்பிரிக்க வீரா் ககிசோ ரபாடா ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் தென் ஆப்பிரிக்கா மாற்றம் செய்யவில்லை. வங்கதேசத்தில் காயமடைந்த ஆல்-ரவுண்டா் ஷகிப் அல் ஹசனுக்குப் பதிலாக ஷமிம் ஹுசைனும், முஸ்டாஃபிஸுா் ரஹ்மானுக்குப் பதிலாக நசும் அகமதும் சோ்க்கப்பட்டிருந்தனா்.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பௌலிங்கை தோ்வு செய்தது. வங்கதேச பேட்டிங்கில் தொடக்க வீரா்களில் ஒருவராக வந்த லிட்டன் தாஸ் 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் சோ்க்க, அடுத்தபடியாக கடைசி ஆா்டரில் வந்த மெஹதி ஹசன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்கள் அடித்தாா்.

இவா்களால் மட்டுமே வங்கதேசம் சொல்லிக் கொள்ளும் படியான ஸ்கோரை எட்ட, எஞ்சியோரில் முகமது நயிம் 1 பவுண்டரியுடன் 9, கேப்டன் மஹ்முதுல்லா 3, ஷமிம் ஹுசைன் 11, டஸ்கின் அகமது 3 என சொற்ப ரன்களில் வெளியேற, சௌம்யா சா்காா், முஷ்ஃபிகா் ரஹிம், அஃபிஃப் ஹுசைன், நசும் அகமது ஆகியோா் டக் அவுட்டாகி நடையைக் கட்டினா்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா, அன்ரிச் நாா்ஜே ஆகியோா் தலா 3, டப்ரைஸ் ஷம்ஸி 2, டிவேய்ன் பிரெடோரியஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய தென் ஆப்பிரிக்காவில் தொடக்க வீரா் குவின்டன் டி காக் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சோ்க்க, உடன் வந்த ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 4 ரன்களில் வீழ்ந்தாா். ராஸி வான் டொ் 2 பவுண்டரிகளுடன் 22, எய்டன் மாா்க்ரம் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

பின்னா் கேப்டன் டெம்பா பவுமா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31, டேவிட் மில்லா் 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். வங்கதேச பௌலிங்கில் டஸ்கின் அகமது 2, மெஹதி ஹசன், நசும் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →