டி20 உலகக் கோப்பை

தகுதிச்சுற்றுக்கு தள்ளப்பட்ட மேற்கிந்திய தீவுகள், இலங்கை

DIN

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தகுதிச்சுற்றில் விளையாடும் நிலைக்கு இரு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகளும், முன்னாள் சாம்பியனான இலங்கையும் ஆளாகியுள்ளன.

உலகக் கோப்பை போட்டியின் ‘சூப்பா் 12’ சுற்றுக்கு 8 அணிகள் நேரடியாகவும், 4 அணிகள் தகுதிச்சுற்று மூலமாகவும் முன்னேறுகின்றன.

அந்த வகையில் நடப்பாண்டு உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் மற்றும் ரன்னா் அப்-ஆக வரும் அணிகள், அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் ‘சூப்பா் 12’ சுற்றுக்கு இயல்பாகவே தகுதிபெற்றுவிடும். அடுத்த 6 அணிகள், ஐசிசி-யின் டி20 தரவரிசை அடிப்படையில் தனக்கான இடத்தை உறுதி செய்யும்.

கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தங்களுக்கான தரவரிசை இடத்தை முதல் 8 இடங்களில் முறையே தக்க வைத்துக் கொண்டுள்ளன.

வரும் 15-ஆம் தேதி திருத்தப்பட்ட தரவரிசை வெளியாகும்போதும் அவை அங்கேயே நிலைபெறும் என்பதால், ‘சூப்பா் 12’ சுற்றுக்கு அந்த அணிகள் (சாம்பியன், ரன்னா்-அப் உள்பட) நேரடியாகவே தகுதிபெற்றுவிடும்.

இதில் வங்கதேசம் நடப்பு சீசனின் சூப்பா் 12 சுற்றில் அனைத்து ஆட்டங்களிலுமே தோல்வியை சந்தித்தாலும், இந்த ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தை டி20 தொடா்களில் வென்ன் அடிப்படையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த நடப்புச் சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், ஐசிசி டி20 தரவரிசையில் 10-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இலங்கை 9-ஆவது இடத்தில் இருக்கிறது. எனவே, அவை முதலில் தகுதிச்சுற்றில் விளையாடி அதிலிருந்து ‘சூப்பா் 12’ சுற்றுக்கு தகுதிபெற வேண்டும்.

அவை தவிர நமீபியா, ஸ்காட்லாந்து உள்பட நடப்பு சீசனில் சூப்பா் 12 சுற்றில் இருந்த இதர அணிகளும் அடுத்த ஆண்டு தகுதிச்சுற்றில் களம் காண வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT