டி20 உலகக் கோப்பை

ஆத்திரத்தால் உண்டான விளைவு: டி20 உலகக் கோப்பை, இந்தியச் சுற்றுப்பயணத்திலிருந்து பிரபல நியூசி. வீரர் விலகல்

DIN


காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று மற்றும் இந்தியச் சுற்றுப்பயணத்திலிருந்து பிரபல நியூசி. வீரர் டெவோன் கான்வே விலகியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி. அந்த ஆட்டத்தில் 38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார் டெவோன் கான்வே. நியூசி. அணிக்காக இதுவரை 3 டெஸ்ட், 3 ஒருநாள், 20 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய அறிமுக டெஸ்டிலேயே இரட்டைச் சதமெடுத்து சாதனை செய்தார். 

இந்நிலையில் அரையிறுதி ஆட்டத்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு ஆத்திரத்தால் தனது இடது கையை பேட்டில் ஓங்கிக் குத்தினார். துரதிர்ஷ்டவசமாக இதில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதனால் இறுதிச்சுற்றில் மட்டுமல்லாமல் இந்தியச் சுற்றுப்பயணத்தில் இருந்தும் கான்வே விலகவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆத்திரத்தை அடக்கியிருந்தால் இறுதிச்சுற்றில் அவரால் விளையாடியிருக்க முடியும். 

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. கான்வே காயம் ஏற்பட்டு விலகியதால் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று மற்றும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மாற்று வீரர் சேர்க்கப்படவில்லை. எனினும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கான்வேக்குப் பதிலாகப் புதிய வீரரின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT