டி20 உலகக் கோப்பை

கேன் வில்லியம்சன் அதிரடி அரைசதம்: ஆஸ்திரேலியாவுக்கு 173 ரன்கள் இலக்கு

DIN

டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 172 ரன்கள் எடுத்துள்ளது. 
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 
தொடக்க ஆட்டக்காரர்களாக குப்தில், மிட்செல் ஆகியோர் களமிறங்கினர். மிட்செல் 11 ரன்களுக்கு வெளியேற பின்னர் வந்த கேப்டன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் குப்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிலிப்ஸும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் அரைசதம் கடந்தார். அவர் 48 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. ஜிம்மி நீஷம் 13, டிம் செய்பெர்ட் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆடம் ஷம்பா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT