டி20 உலகக் கோப்பை

13-0: இந்தியா - பாகிஸ்தான் மோதல் பற்றி கங்குலி

உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை 13-வது முறையாக இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

DIN


உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை 13-வது முறையாக இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் (50 ஓவர், டி20) இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன்பு 12 முறை மோதியதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 7 முறையும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்துள்ளது. 

இந்நிலையில் நாளை நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி ஒரு பேட்டியில் கூறியதாவது:

இந்தியா 13-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 13-0 என முன்னிலை பெற அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியில் உள்ள எல்லா வீரர்களும் ஆட்டத்தில் வெற்றியைத் தரக்கூடிய திறமை உள்ளவர்கள். உலகக் கோப்பையைக் கடந்த 10 வருடங்களாக நாம் வெல்லவில்லை. அந்தக் குறையை இந்த அணி போக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளியானது விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் டிரைலர்!

ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

SCROLL FOR NEXT