முகப்பு
டி20 உலகக் கோப்பை

பாபர் அசாம் 'டக்', ரிஸ்வான் காலி: இந்தியா மிரட்டல் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் விக்கெட்டை பவர்பிளேவிலேயே வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் விக்கெட்டை பவர்பிளேவிலேயே வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மெல்போர்னில் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சூழலைக் கருத்தில் கொண்டு தொடக்கத்தில் பந்து 'ஸ்விங்' ஆகும் என்பதால், அதைப் பயன்படுத்த விரும்புவதாக ரோஹித் தெரிவித்தார்.

இதற்கேற்றார் போல முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் மிகச் சிறப்பாக வீசினார். வைட் மூலமாக மட்டுமே 1 ரன்னைக் கொடுத்தார்.

2-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அவர், முதல் பந்திலேயே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கே உரித்தான முறையில் எல்பிடபிள்யு செய்தார்.

இதன்பிறகு, புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் தொடர்ந்து ஸ்விங் பந்துகள் மூலம் பாகிஸ்தானுக்கு நெருக்கடியளித்தனர். 

இந்த நேரத்தில் அர்ஷ்தீப் சிங், தனது இரண்டாவது ஓவரில் திடீரென ஷாட் பிட்ச் பந்தை வீச ரிஸ்வான், பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார்.

இதன்பிறகு, ஷான் மசூத் மற்றும் இஃப்திகார் அகமது பாட்னர்ஷிப்பை கட்டமைக்க முயற்சித்து வருகின்றனர்.

பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →