டேவிட் மில்லர் படம் | AP
டி20 உலகக் கோப்பை

மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்; தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் உருக்கம்!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள மிகக் கடினமாக இருப்பதாக டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள மிகக் கடினமாக இருப்பதாக டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டியில் மோதின. அரையிறுதிப் போட்டியோடு வெளியேறும் அணி என்ற முத்திரையை தன்மீதிருந்து எடுத்தெடுறிந்த தென்னாப்பிரிக்க அணி, இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள மிகக் கடினமாக இருப்பதாக டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: நான் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள மிகவும் கடினமாக இருக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக எவ்வாறு உணர்ந்தேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தென்னாப்பிரிக்க அணியில் ஒருவராக இணைந்து வெற்றிக்காக போராடியது பெருமையாக இருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகமாக 50 கோல்கள் அடித்த எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸி சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு!

மத்திய அரசு நிதி விடுவிப்பு! இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை தொடங்கப்படும்!

குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT