படம் | டி20 உலகக் கோப்பை (எக்ஸ்)
டி20 உலகக் கோப்பை

நியூயார்க் ஆடுகளம் குறித்து ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா கருத்து!

நியூயார்க் ஆடுகளம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

DIN

நியூயார்க் ஆடுகளம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.

இந்த நிலையில், நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆடுகளத்தைப் பற்றி புரிந்துகொள்வதற்கு கடினமாக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ரோஹித் சர்மா பேசியதாவது: போட்டிக்கு டாஸ் வீசும்போதே ஆடுகளம் எப்படி இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை எனக் கூறினேன். புதிய ஆடுகளத்தில் பௌன்சர்கள் அதிகம் இருந்தது. நாங்கள் இரண்டாவது பேட்டிங் செய்தபோதும், ஆடுகளம் பேட்டிங்குக்கு எளிதாக இல்லை. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறு இருந்ததாக நினைக்கிறேன். இந்திய அணியில் உள்ள 4 வேகப் பந்துவீச்சாளர்களில் 3 பேர் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர்கள். அர்ஷ்தீப் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் அவர் கைப்பற்றிய இரண்டு விக்கெட்டுகள் உதவியாக இருந்தது என்றார்.

ஆடுகளம் தொடர்பாக ஜஸ்பிரித் பும்ரா பேசியதாவது: ஆடுகளம் குறித்து குறை கூறுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. டி20 போட்டிகளில் ஆட்டத்தின் தன்மைக்கேற்றவாறு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். எனது வழக்கமான பந்துவீச்சு திட்டத்தை செயல்படுத்தினேன். எனது திட்டம் கைகொடுத்தது என்றார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வருகிற ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT