படம் | AP
டி20 உலகக் கோப்பை

மீண்டும் ஹாட்ரிக்; டி20 உலகக் கோப்பையில் பாட் கம்மின்ஸ் புதிய சாதனை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுக்கானப் போட்டியில் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுக்கானப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

கடந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஹாட்ரிக் விக்கெட்டினைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன்மூலம், டி20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமைக்கும் அவர் சொந்தக்காரரானர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 18 ஓவரை வீசிய பாட் கம்மின்ஸ், அந்த ஓவரின் இறுதிப்பந்தில் ரஷித் கானை ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின், 20 ஓவரை வீசிய அவர் முதல் இரண்டு பந்துகளில் கரீம் ஜனத் மற்றும் குல்பதீன் நயீபின் விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதன்மூலம், அவர் தொடர்ச்சியாக இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டினை எடுத்தார்.

முன்னதாக, கடந்த போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டினைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT