டி20 உலகக் கோப்பையில் பாரபட்சம் - மைக்கேல் வாகன் கருத்து.  
டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை இந்தியாவுக்கு சாதகமாக நடத்தப்படுகிறது!

டி20 உலகக் கோப்பையில் பாரபட்சம் காட்டப்படுவதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கூறியுள்ளார்.

DIN

தரௌபாவில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தெ.ஆ. அணி 8.5 ஓவரில் இலக்கை அடைந்து இறுதிப் போட்டிக்கு முதல்முறையாக தேர்வானது.

தெ.ஆ. சார்பில் மார்கோ யான்சென் 3, ரபாடா, நோர்க்யா தலா 2 என வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது இந்த ஆடுகளம்.

இந்தப் போட்டியின் ஆடுகளம் (ஃபிட்ச்) குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆப்கன் பயிற்சியாளரும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

யான்சென் ஆட்டநாயகான தேர்வு செய்யப்பட்டார். டி20 கிரிக்கெட் ஃபிட்ச் போல அல்லாமல் டெஸ்ட் போட்டிக்கனது போல் அமைத்திருப்பதாக பலரும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.

யான்சென் ஆட்டநாயகான தேர்வு செய்யப்பட்டார்

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில், “நிச்சயமாக இந்த அரையிறுதிப் போட்டி கயானா போன்று அமைந்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஒட்டுமொத்த தொடருமே இந்தியாவுக்கு சாதகமாகவும் மற்ற அணிகளுக்கு பாரபட்சமாகவும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

வரணனையிலும் ரிக்கி பாண்டிங் ஃபிட்ச் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். ஆப்கன் கேப்டன் ரஷித் கானும் ஃபிட்ச் ஏதுவாக இல்லை என சூசகமாக கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT