முகப்பு
தற்போதைய செய்திகள்

4 ஆண்டுகளுக்குப் பின் மணிமுத்தாறு அணை நிரம்பியது: அணையிலிருந்து உபரி நீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதானமான அணையான மணிமுத்தாறு அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

Updated On : 9 ஜனவரி 2021, 10:44 am IST
மணிமுத்தாறு மேல் மட்ட பிரதான மதகில் திறந்துவிடப்பட்டுள்ள உபரிநீர்.
பகிர்:

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதானமான அணையான மணிமுத்தாறு அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் பிரதானமான அணையாகும். இதில் மணிமுத்தாறு அணை 118 அடி உயரம் மற்றும் 5,511 மில்லியன் கன அடி கொள்ளளவுடன் மாவட்டத்தின் பெரிய அணையாக உள்ளது. 

மணிமுத்தாறு அணைக்கு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் அதிக நீர் வரத்து இருக்கும். ஆனாலும் ஆண்டு தோறும் மணிமுத்தாறு அணை நிரம்புவது கிடையாது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு மணிமுத்தாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. 

Advertisement

Advertisement

சனிக்கிழமை காலை அணையில் நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. 

இதையடுத்து அணையிலிருந்து 80 அடி கால்வாயில் 400 கன அடியும் மேல் மதகு மூலம் 200 கன அடியும் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. 

4 ஆண்டுகளுக்குப் பின் மணிமுத்தாறு அணை நிரம்பியதையடுத்து பொதுமக்கள் அணையை கண்டுகளித்து வருகின்றனர். 

மேலும் வடகிழக்குப் பருவ மழை ஜனவரி மாதத்திலும் தொடர்வதாலும் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் விவசாயிகள் வேகமாக நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142.15 அடியும் அணைக்கு நீர்வரத்து 2061.97 கன அடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 1942.29 கன அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 144.26 அடியாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments