முகப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்து: 3 பேர் பலி 3 பேர் காயம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Updated On : 9 ஜனவரி 2021, 9:40 am IST
வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதிய கார்.
பகிர்:


வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கோயமுத்தூர், வெள்ளலூர், அண்ணா நகரைச் சேர்ந்தவர் மயில்சாமி (39). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் ஒரு காரில் வீட்டிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியது. 

Advertisement

Advertisement

இதில், காரை ஓட்டி வந்த மயில்சாமி, இவருடைய மனைவி இந்து (37), உறவினர் கௌசல்யா (60) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மயில்சாமி மகன் கௌதம் (13), ரம்யா (11), உறவினர் கலைவாணி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த அனைவரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments