முகப்பு
தற்போதைய செய்திகள்

சின்னசேலம் அருகே கார் விபத்தில் தாய், தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேர் பலி

நாமக்கல்லில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில், மகளை சேர்ப்பதற்கு சென்றபோது, சின்னசேலம் அருகே சனிக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 9 ஜனவரி 2021, 9:50 am IST
பகிர்:


நாமக்கல்லில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில், மகளை சேர்ப்பதற்கு சென்றபோது, சின்னசேலம் அருகே சனிக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே விருத்தாசலம்- சேலம் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் சனிக்கிழமை அதிகாலை புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பிரியா( 43), இவரது மகன் அபிஷேக்( 16 )ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

Advertisement

பிரியாவின்  கணவர் சௌந்தரராஜன் (45), மகள் எஸ்வந்தநினி (18) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில், சிகிச்சை பலனின்றி சௌந்தரராஜன் உயிரிழந்தானர். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நாமக்கல்லில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில், மகளை சேர்ப்பதற்கு சௌந்தரராஜன் குடும்பத்துடன் சென்றபோது, எதிர்பாராவிதமாக விபத்து நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.