100 நாள் வேலை திட்டம் : முட்டுக்கட்டைகள் அகலுமா?
கும்மிடிப்பூண்டி, ஜூலை 29: மத்திய அரசின் நிதி உதவி மூலம் செயல்படும் ""தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை'' செயல்படுத்தும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களால் திட்டத்தின் முழு பலன் கிடைக்காமல் போகிறது. த
தமிழ்நாடு100 நாள் வேலை திட்டம் : முட்டுக்கட்டைகள் அகலுமா?
கும்மிடிப்பூண்டி, ஜூலை 29: மத்திய அரசின் நிதி உதவி மூலம் செயல்படும் ""தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை'' செயல்படுத்தும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களால் திட்டத்தின் முழு பலன் கிடைக்காமல் போகிறது. த
கும்மிடிப்பூண்டி, ஜூலை 29: மத்திய அரசின் நிதி உதவி மூலம் செயல்படும் ""தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை'' செயல்படுத்தும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களால் திட்டத்தின் முழு பலன் கிடைக்காமல் போகிறது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டமானது, 100 நாள் வேலை, ரூ. 80 கூலி என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இத்திட்டத்தில் கூலி குறைவாக கொடுக்கப்படுகிறது என மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஒரு கிராமத்தின் அடிப்படை தேவைகளான, ஏரி தூர் வாருதல், குளம் வெட்டுதல், கால்வாய் பணி, சாலை அமைத்தல் போன்றவைகளை பூர்த்தி செய்வதோடு, இந்த பணிகளில் அந்த கிராம மக்களை ஈடுபடுத்தி ஒரு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கோடுதான் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், இந்த திட்டத்தில் கூலி குறைவு, பணி நிறைவு பெறாமை போன்ற குளறுபடிகள் ஏற்பட்டு ஊழல் மிஞ்சி கிடப்பதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கு முழு முதல் காரணம் யாரென்றால் அரசு அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகிகளுமே என்று கூறிவிடலாம்.
இந்த திட்டத்தில் வேலை செய்யும் பெரும்பாலான கூலித் தொழிலாளிக்கு இந்த திட்டத்தின் நோக்கம், கூலி வழங்கப்படும் விதிமுறைகள் என்ன என்பது தெரியாது. அரசு அதிகாரிகளோ, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமோ இது பற்றி மக்களிடம் எடுத்துக் கூறியதும் இல்லை.
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியில் ஒரு நாளைக்கு ரூ. 80 கூலி தருகிறோம் எனக் கூறிவிட்டு எங்களுக்கு 40,50, 60 தான் கூலியாகத் தருகிறார் என தினமும் ஒரு ஊராட்சியிலாவது பொதுமக்கள் பிரச்னையை எழுப்பி வருகிறார்கள்.
பணி நிறைவு பெறாமலேயே நிறைவு பெற்றதாக கூறி இந்த திட்டத்தில் ஊழல் செய்தார்கள் என பல ஊராட்சித் தலைவர்கள் மேல், குற்றம் சாட்டி அரசு தரப்பில் இருந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
பல ஊராட்சிகளில் பெண்களுக்கு கூலி குறைவாக கொடுக்கப்படுவதாக கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கண்ணம்பாக்கம் ஊராட்சித் தலைவர் சதீஷ்குமாரிடம் கேட்ட போது,
""தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பற்றி முழுமையாக மக்கள் புரிந்து கொள்ளாததும், அதை பற்றி அதிகாரிகளும் சரியாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தாதுமே பிரச்னைக்கு காரணம்'' என்றார்.
மேலும், இந்த திட்டத்தின் படி ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்பதை புரிந்து கொள்ளாமல், தனி பருக்கு 100 நாள் வேலை என்று பெரும்பாலான மக்கள் தவறாக புரிந்து கொள்வதாகவும், அரசு குறிப்பிட்டுள்ள 20க்கு 9 மீட்டர் அகலம், 3 அடி ஆழம் மண் எடுத்தல் என்று வேலை செய்தாலோ அல்லது 7 மணி நேரம் வேலை செய்தால் மட்டுமே ரூ.80 கூலி என்பதை சரியாக விளக்காததாலே கூலி தொடர்பாக பிரச்னை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
""தனது ஊராட்சியில் பணி துவங்குவதற்கு முன் மக்களை கூட்டி 3 நாள்கள் இந்த திட்டத்தை விளக்கி தனது சொந்த முயற்சியில் கூட்டம் நடத்தியதாகவும், அதனால், தனது ஊராட்சியில் எந்த பிரச்னையும் ஏற்படுவது இல்லை'' என்றார் ஊராட்சித் தலைவர் சதீஷ்குமார்.
இனியாவது, ""தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை எல்லா மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அரசு அதிகாரிகள் திட்ட விளக்கக் கூட்டங்களை நடத்தி, அடிக்கடி ஆய்வு செய்து பணி நிறைவு பெற்றதை உறுதி செய்வதன் மூலமே மக்களுக்கும் ஊராட்சி நிர்வாகத்துக்கும் ஏற்படும் உரசலை நிவர்த்தி செய்ய முடியும்'' என்பதை புரிந்து செயல்பட்டால் மட்டுமே இத் திட்டம் சிறப்பாக செயல்படமுடியும்.