தமிழ்நாடு

அரசு தொடக்கப் பள்ளியில் அவலம்: தவிக்கும் தமிழ் வழி கல்வி மாணவர்கள்!

உதகை, ஜூன் 29:  கூடலூர் அருகே உள்ள பந்தலூர் சேலக்குன்னா அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி போதிக்க ஆசிரியர் இல்லாததால் 33 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பல பள்ள

ஏ. பேட்ரிக்

உதகை, ஜூன் 29:  கூடலூர் அருகே உள்ள பந்தலூர் சேலக்குன்னா அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி போதிக்க ஆசிரியர் இல்லாததால் 33 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகள் தமிழ் மற்றும் மலையாள மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன.

ஆனால், மலையாள மொழி தலைமையாசிரியரை கொண்டுள்ள பள்ளிகளில் தமிழ் வழி மாணவர்கள் முறையாக கவனிக்கப்படுவதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.

பந்தலூரில் சேலக்குன்னா அரசு தொடக்கப் பள்ளியில் மலையாள மொழி தலைமையாசிரியர் மட்டுமே பணியாற்றிவரும் நிலையில் தமிழ் வழி மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக எழுந்த புகார்களையடுத்து தமிழ் ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவரும் மாற்றலாகிச் சென்று விட்டார்.

எனவே, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஒரு தமிழ் ஆசிரியை நியமிக்கப்பட்டார். ஆனால் போதிய சம்பளம் இல்லாததால் அவரும் பணிக்கு வருவதில்லையாம்.

இதற்கிடையே இப் பள்ளியில் மலையாள வழிக் கல்வியை கற்று வந்த 5 மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்துவிட்டனர்.

இப் பிரச்னைகளுக்காக தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மாற்று சான்றிதழ் கேட்டும் அதை பள்ளி நிர்வாகம் தர மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப் பள்ளியிலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 33 பேர் தமிழ் ஆசிரியர் இல்லாமலும், வேறு பள்ளிகளில் சேர முடியாமலும் தவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT