உலா வரும் நவீன நரகாசுரன்கள்
சென்னை, அக். 15: மக்களை வதைத்த கொடிய அரக்கனான நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி எனக் கூறப்படுகிறது. ஆனால் புராண கால நரகாசுரனை விடவும் கொடூரமான பல நவீன நரகாசுரன்கள் நம்மிடையே உலா வருகின்றனர். அத்தகைய நரகாச
தமிழ்நாடுஉலா வரும் நவீன நரகாசுரன்கள்
சென்னை, அக். 15: மக்களை வதைத்த கொடிய அரக்கனான நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி எனக் கூறப்படுகிறது. ஆனால் புராண கால நரகாசுரனை விடவும் கொடூரமான பல நவீன நரகாசுரன்கள் நம்மிடையே உலா வருகின்றனர். அத்தகைய நரகாச
சென்னை, அக். 15: மக்களை வதைத்த கொடிய அரக்கனான நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி எனக் கூறப்படுகிறது. ஆனால் புராண கால நரகாசுரனை விடவும் கொடூரமான பல நவீன நரகாசுரன்கள் நம்மிடையே உலா வருகின்றனர். அத்தகைய நரகாசுரன்கள் குறித்து சில தகவல்கள் வருமாறு:
செல்போன்
செல்போன்களின் வரவுக்குப் பின் தகவல் தொடர்பில் நினைத்துப் பார்க்க முடியாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் "பேசுவதற்காகவே செல்போன் என்ற நிலை மாறி, செல்போன் இல்லையென்றால் இனி எதுவுமே இல்லை' என்ற மனநிலை உருவாகிவிட்டது.
குளியலறையில், உண்ணும்போது, நடக்கும்போது, படுக்கையறையில், பஸ்ஸில், ரயிலில், அலுவலகத்தில் என சகல நேரமும் தேவையின்றி மணிக்கணக்கில் செல்போனில் பேசும் வியாதி அதிகரித்து விட்டது.
இத்தகைய செல்போன் பயன்பாட்டால் மக்களின் மன நலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. செல்போன்களிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகள் உடலில் பல பாதிப்புகளை உண்டாக்குகின்றன.
கியூபா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளைவிட, செல்போன்களை அதிகம் பயன்படுத்தும் இந்தியா போன்ற நாடுகளில் தற்கொலை மரணங்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு செல்போன்களால் ஏற்படும் மன உளைச்சலே காரணம் என மக்களின் மன நல மேம்பாடு குறித்து ஆராயும் பல சர்வதேச நிறுவனங்கள் கூறி வருகின்றன.
தொலைக்காட்சித் தொடர்கள்
நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் நோக்கம் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதே. ஆனால் அத்தகைய வளர்ச்சியால் உருவான தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கின்றன. தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள் பெண்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. உண்மைக்கு மாறான, எதார்த்தத்துக்குப் புறம்பான இத்தொடர்கள் பெண்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில், பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இயற்கை வளங்கள் கொள்ளை
ஆற்று மணல், காடுகள் முதல் நம் நீர், நில வளங்கள் யாவும் சுயநல சக்திகளால் கொள்ளை அடிக்கப்படுகின்றன. உலகின் பெரும் பணக்கார நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காக நூறாண்டு காலமாக சுற்றுச்சூழலை நஞ்சாக்கி வருகின்றன. இதனால் காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற பாதிப்புகள் உருவாகி, அதனால் உலகின் சாதாரண மக்கள் தங்கள் வாழ்வையே இழக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
விலைவாசி உயர்வு
விவசாய விளைபொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை இல்லை. நுகர்வோருக்கும் குறைந்த விலையில் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. ஆனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்கின்றன. உற்பத்தியிலோ, உணவுப் பொ ருள் விநியோகத்திலோ தொடர்பில்லாத இந்திய மற்றும் பன்னாட்டு பெரும் பணக்காரர்களே இத்தகைய உயர்வுக்கு காரணம். இணையதள வசதி மூலம் ஆன்லைன் வர்த்தக முறையில் அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கி, விலைவாசியை உயரச் செய்து, கொள்ளை லாபம் அடித்து, மக்களை வதைக்கிறார்கள்.
வாக்களிக்கப் பணம்
நாட்டை ஆளும் தகுதியான தலைவர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்வதற்கு பதிலாக, பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வாக்கு என்ற நிலை உருவாகி விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. இது நமது ஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானத்தையே தகர்த்து விடும்.
வன்முறை
சர்வதேச அளவில் தீவிரவாதச் செயல்கள் அதிகரித்து விட்டன. நம் உள்ளூரிலோ பெரும் நகரங்களில் இருந்த தாதாக்களின் அட்டூழியம், இன்று சிறு கிராமங்கள் வரை பரவி விட்டது. கூலிப்படைகள் மூலம் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது கிராமங்களிலும் சாதாரணமாக நடைபெறுகிறது. மேலும் கல்விக் கொள்ளையர்கள், மருத்துவ வசதிகள் மூலம் மக்களைச் சுரண்டுவோர் என ஏராளமான நரகாசுரன்கள் இங்கே வலம் வருகின்றனர்.