தமிழ்நாடு

10 ஆண்டுகளாக போராடும் ஆதிதிராவிட ஆசிரியர்கள்

சென்னை, அக். 20:  ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஒப்பந்த அடிப்படையில் (1986-1991) நியமிக்கப்பட்ட 192 ஆசிரியர்கள், பணியேற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்யக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.   ஆனா

ஆர். ஆதித்தன்

சென்னை, அக். 20:  ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஒப்பந்த அடிப்படையில் (1986-1991) நியமிக்கப்பட்ட 192 ஆசிரியர்கள், பணியேற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்யக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

  ஆனால், இதுநாள் வரையில் அரசு எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

  தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கடந்த 1986 முதல் 1991 ஆம் ஆண்டு வரை 192 பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

  இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் 09.09.1996 மற்றும் 20.10.1996 ஆம் தேதிகளில் பணிவரன்முறை செய்யப்பட்டனர்.

  பணியேற்ற நாளுக்குப் பதிலாக (1986-1991), அதாவது 10 ஆண்டுகளுக்குப் பின்னரே பணிவரன்முறை செய்ய உத்தரவிடப்பட்டது.

  ஆனால், பொதுக் கல்வித்துறை மூலம் 1986-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இதர பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் பலரும் பணியேற்ற அதே ஆண்டு முதல் பணிவரன்முறை செய்யப்பட்டனர்.

  இதையடுத்து, பணியேற்ற 1986 நாள்முதல் பணிவரன்முறை கோரி, கடந்த 2007-ல் ஆதிதிராவிடர் நலத்துறை பட்டதாரி ஆசிரியர்களில் 16 பேர் மட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

  அதை விசாரித்த உயர் நீதிமன்றம், விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆசிரியர்கள் அனைவரையும் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

  ஆனாலும் நிதித்துறையின் ஒப்புதல் கிடைக்காததால் ஆசிரியர்கள் 10 ஆண்டுகாலமாக பணிவரன்முறை செய்யவில்லை.

  நிதித்துறை ஒப்புதல் இல்லை...: "ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் மற்றும் செயலாளர் ஆகியோர் பணிவரன்முறை செய்ய உரிய நடவடிக்கை எடுத்து வந்தபோதிலும், நிதித்துறை சார்பில் இருந்து எவ்வித ஒப்புதலும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பணிவரன்முறை கிடைக்கவில்லை' என்கிறார் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பிச்சானந்தம்.

  "பணியேற்ற நாள் முதல் பணிவரன்முறை கிடைக்காததால் முழுமையான ஓய்வூதியம் பெறும் தகுதி இழப்பும், பணி ஓய்வுக்குப்பின் கிடைக்க வேண்டிய பணிக்கொடை இழப்பும் ஏற்பட்டுள்ளது. பலர் இன்னும் 2 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர். சிலர் எவ்வித பலனின்றி ஓய்வுபெற்றுள்ளனர்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

  "ஆதிதிராவிடர் நலத்துறையின் கொள்கை முடிவை எடுக்கும் அதிகாரம் இப்போது துணை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருப்பதால், அவர்தான் ஆதிதிராவிடர் பட்டதாரி ஆசிரியர்கள் 192 பேரை பணியேற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்ய விதிகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT