முகப்பு
தமிழ்நாடு

நிலம் கையகப்படுத்துவதில் தேக்கநிலை: தமிழக அரசுக்கு மம்தா கடிதம்

சென்னை, மார்ச் 31: ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டும், நிலம் கையகப்படுத்துவதில் தேக்கநிலை நீடிப்பதால், தமிழகத்தில் 9 அகலப்பாதை திட்டங்கள் முடங்கியுள்ளன. இதனால் இந்த அகலப் பாதை திட்டங்களுக்கு ஆகு

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:19 PM
பகிர்:

சென்னை, மார்ச் 31: ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டும், நிலம் கையகப்படுத்துவதில் தேக்கநிலை நீடிப்பதால், தமிழகத்தில் 9 அகலப்பாதை திட்டங்கள் முடங்கியுள்ளன.

இதனால் இந்த அகலப் பாதை திட்டங்களுக்கு ஆகும் செலவு பல கோடி ரூபாய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளை வழியாக அகலப்பாதை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் உடனடியாக நிலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

 செங்கல்பட்டு} விழுப்புரம் 2}வது அகலப் பாதை: தமிழக ரயில் போக்குவரத்தின்  "முதுகெலும்பாகவும்', நெரிசல் மிகுந்தாகவும் உள்ளது சென்னை} விழுப்புரம்} திருச்சி} மதுரை} நெல்லை} நாகர்கோவில் வழித்தடம்.

இந்த வழித்தடத்தில் 2}வது அகலப் பாதை அமைக்கும் திட்டம், செங்கல்பட்டு} ஒட்டிவாக்கம் (11 கி.மீ.), மதுராந்தகம்} தொழுபேடு (23 கி.மீ.), பேரணி} விழுப்புரம் (19 கி.மீ.) என்று 3 பிரிவுகளாக ரூ. 498 கோடியில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

÷இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு} விழுப்புரம் இடையே 53 கிலோமீட்டர் தூரத்துக்கு 2}வது அகலப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ. 40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒலக்கூர், பாஞ்சாலம், திண்டிவனம், மயிலம், பேரணி, விக்கிரவாண்டி உள்ளிட்ட கிராமங்களில் 30 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி வழங்குமாறு காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்களிடம் கோரப்பட்டுள்ளது.

விழுப்புரம்} திண்டுக்கல் 2}வது அகலப் பாதை: 273 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகலப் பாதை அமைக்கும் இத் திட்டத்துக்காக ரூ. 40 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 151 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி வழங்குமாறு தெற்கு ரயில்வே கோரியுள்ளது.

திண்டிவனம்} நகரி புதிய அகலப் பாதை: முதல்கட்டமாக இந்தத் திட்டத்தின் கீழ் ஆர்க்காடு} ராணிப்பேட்டை இடையே அகலப் பாதை அமைக்க ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தாதாபுரம், வெள்ளிமேடுபேட்டை, கொடியாலம், மிசா நல்லூர், காட்டேரி, அத்திப்பாக்கம், வரம்பூண்டி, மேல்பாக்கம், ஊரல், கருவம்மாபாக்கம், உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்த உள்ளது.

திண்டிவனம்} திருவண்ணாமலை புதிய அகலப் பாதை: இந்தத் திட்டத்துக்காக செஞ்சி, ஆலம் பூண்டி, பாலப்பாடி, கீழ் பெண்ணாத்தூர், குடிசால்பாளையம், நாட்டார் மங்கலம் உள்ளிட்ட 35 கிராமங்களில் 255 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது.

இதுகுறித்து விழுப்புரம்} திருவண்ணாமலை ஆகிய மாவட்ட நிர்வாகங்களிடம் ஏற்கெனவே கோரப்பட்டுள்ளது.

 முதல்வரின் சொந்த ஊருக்கு: தமிழக முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டி} அகஸ்தியம்பள்ளி இடையே அகலப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரயில்வே பட்ஜெட்டில் ஏற்கெனவே நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.இதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 108 ஹெக்டேரும், திருவாரூர் மாவட்டத்தில் 10 ஹெக்டேரும் நிலம் கையகப்படுத்த ஏற்கெனவே கோரப்பட்டுள்ளது.

இதில் திருக்குவளை தாலுகாவில் மட்டும் 14 கிராமங்களிலும், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 4 கிராமங்களிலும் நிலம் தேவைப்படுகிறது.

சின்னசேலம்} கள்ளக்குறிச்சி அகலப் பாதை: சின்னசேலம்} கள்ளக்குறிச்சி இடையே 16 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய அகலப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 35 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 54 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதேபோல அத்திப்பட்டு} புத்தூர் (88 கிலோமீட்டர்)} 105 ஹெக்டேர், ஈரோடு} பழனி (91 கிலோ மீட்டர்), சென்னை} கடலூர் ஆகிய புதிய அகலப் பாதை திட்டங்களுக்கு ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதால் இந்தத் திட்டப் பணிகளை தொடங்குவதில் தேக்க நிலை தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.