முகப்பு
தமிழ்நாடு

பயிர்க் காப்பீடு: நெல் விவசாயிகளிடம் முழு பிரீமியம் வாங்க மறுக்கும் கூட்டுறவு வங்கிகள்

சென்னை, டிச. 9: கனமழை, வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்க் காப்பீட்டுக்கான முழு பிரீமியத்தை வாங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மறுத்து வருகின்றன. கடந்த இரு வாரங்களாக

தமிழ்நாடு

பயிர்க் காப்பீடு: நெல் விவசாயிகளிடம் முழு பிரீமியம் வாங்க மறுக்கும் கூட்டுறவு வங்கிகள்

சென்னை, டிச. 9: கனமழை, வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்க் காப்பீட்டுக்கான முழு பிரீமியத்தை வாங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மறுத்து வருகின்றன. கடந்த இரு வாரங்களாக

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:29 PM
பகிர்:

சென்னை, டிச. 9: கனமழை, வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்க் காப்பீட்டுக்கான முழு பிரீமியத்தை வாங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மறுத்து வருகின்றன.

கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் பெய்த கனமழையால், மாநிலம் முழுவதும் விவசாய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு நெல் விவசாயிகளுக்கு கடுமையான மகசூல் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களுக்கு ஏக்கருக்கு  3,200 வீதம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நெல் உற்பத்திக்கான செலவு ஏக்கருக்கு  15 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்து விட்ட நிலையில், தமிழக அரசின் நிவாரணம் விவசாயிகளைப் பாதுகாப்பதாக இருக்காது. எனவே, பயிர்க் காப்பீடு மட்டுமே விவசாயிகளின் நஷ்டத்தை ஓரளவு குறைக்க உதவும் என கருதப்படுகிறது.

இந்நிலையில், பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியத்தை செலுத்துவதற்கான கடைசி நாள் இம்மாதம் 15-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இப்போது பிரிமியம் செலுத்துவதில் நெல் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பிரீமியம் செலுத்த வரும் விவசாயிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கிடையே பயிர்க் காப்பீட்டுக்கான முழு பிரீமியத்தையும் வாங்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மறுக்கின்றன என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் இரண்டு அளவுகளில் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்ச உத்தரவாத மகசூலுக்கான காப்பீடு என்ற வகையில் ஏக்கருக்கு  13 ஆயிரத்து 34 காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியம் அரசின் மானியம் நீங்கலாக ஏக்கருக்கு  130 செலுத்த வேண்டும்.

குறைந்தபட்ச உத்தரவாத மகசூலுக்கும் மேல் அதிகபட்ச மகசூல் வாய்ப்புக்கான காப்பீடு என்ற வகையில் ஏக்கருக்கு  11 ஆயிரத்து 396 காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக, ஒரு ஏக்கரில் கிடைக்க வாய்ப்புள்ள மொத்த மகசூல் என்ற அடிப்படையில் ஏக்கருக்கு  24 ஆயிரத்து 420 காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதற்கான மொத்த பிரீமியமாக சிறு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.574, பெரு விவசாயிகள் ரூ.637 செலுத்த வேண்டும்.

இந்நிலையில், விவசாயிகள் மொத்த மகசூல் வாய்ப்புக்கான பிரீமியத்தை செலுத்த தயாராக உள்ள போதிலும், பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில் குறைந்தபட்ச உத்தரவாத மகசூலுக்கான பிரீமியத் தொகை மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. விவசாயிகள் தரும் கூடுதல் பிரீமியத்தை வாங்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ். ரங்கநாதன் கூறியதாவது:

மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதி விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்ய விரும்புகின்றனர். உதாரணமாக நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்து விட்டன. அந்தப் பகுதி விவசாயிகள் முழுக் காப்பீட்டுக்கான பிரீமியத்தை செலுத்தவே விரும்புவர்.  இதனை வங்கி ஊழியர்கள் மறுத்தால், அது சரியல்ல.

எனவே, உத்தரவாத மகசூலுக்கும் மேல் பிரீமியம் செலுத்த விரும்பும் விவசாயிகளிடம் வங்கிகள் மறுக்காமல் பிரீமியத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இது குறித்து கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு உடனடியாக அறிவுறுத்த வேண்டும்.

சாகுபடி பாதிப்பு அதிகமாக உள்ளதால், பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி தேதியை மேலும் சில நாள்கள் நீட்டிப்பது குறித்தும் தமிழக அரசு பரிசீலிக்க  வேண்டும் என்றார் ரங்கநாதன்.  

இது குறித்து இந்திய வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் சி. அன்பரசு கூறியதாவது:

குறைந்தபட்ச உத்தரவாத மகசூலுக்கு காப்பீடு செய்வதா அல்லது அதிகபட்ச வாய்ப்புள்ள மகசூலுக்கு காப்பீடு செய்வதா என்பதை விவசாயிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.  எனவே, இந்த இரண்டு பிரீமிய அளவுகளில் விவசாயிகள் எதைத் தேர்வு செய்கிறார்களோ அதற்கேற்ப பிரீமியம் வசூல் செய்ய வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ஏற்கெனவே தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம்.

குறைந்தபட்ச உத்தரவாத மகசூலுக்கான பிரீமியம் மட்டும் வசூலித்தால், விவசாயிகள் பாதிப்படைய நேரிடும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் 50 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டால், அந்தப் பகுதியில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 சதவீதம் வழங்கப்படும். அங்கு உத்தரவாத மகசூலுக்கு மட்டும் காப்பீடு செய்தவர்களுக்கு ஏக்கருக்கு சுமார் 6,500 மட்டுமே கிடைக்கும். அதிகபட்ச வாய்ப்புள்ள மகசூலுக்கு காப்பீடு செய்திருந்தால், அவர்களுக்கு ஏக்கருக்கு 12 ஆயிரத்துக்கும் மேல் கிடைக்கும்.  

எனவே, விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டிய பலனைத் தடுக்காத வகையில், வங்கி ஊழியர்கள் பிரீமியம் வசூலிக்க வேண்டும்.

மேலும், உத்தரவாத மகசூலுக்கு மட்டும் காப்பீடு செய்துள்ளவர்கள், கடைசி தேதிக்குள் அதிகபட்ச மகசூல் காப்பீட்டுக்கான மீதி பிரீமியத்தை வங்கிகளில் செலுத்தலாம் என்றார் அன்பரசு.

முழு கட்டுரையைப் படிக்க →