முகப்பு
தமிழ்நாடு

இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

வந்தவாசி : வந்தவாசியை அடுத்த வங்காரம் காலனியில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.  ÷வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது வங்காரம்-ஆவணவாடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உ

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:38 PM
பகிர்:

வந்தவாசி : வந்தவாசியை அடுத்த வங்காரம் காலனியில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.

 ÷வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது வங்காரம்-ஆவணவாடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட வங்காரம் காலனியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 20 தொகுப்பு வீடுகளும், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு 20 தொகுப்பு வீடுகளும் கட்டப்பட்டன. இந்த 40 தொகுப்பு வீடுகளில் மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

 ÷இந்த வீடுகள் அனைத்தும் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. மேற்கூரையில் சிமென்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சுவர்களில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மழைக் காலங்களின்போது மேற்கூரை ஒழுகுவதால் வீடுகளின் மேல் தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

 ÷மேலும் விரிசல் ஏற்பட்ட சுவர்களின் வழியாகவும் மழைநீர் வீட்டினுள் புகுவதால் தரை எப்போதும் ஈரமாகவே காணப்படுகிறது. இதனால் தங்கள் குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும், தரையில் படுத்துத் தூங்க முடிவதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 ÷இந்த வீடுகள் பராமரிக்கப்படவில்லை என்றால் இடிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையாம்.

 ÷எனவே சேதமடைந்துள்ள இந்த வீடுகளைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →