தமிழ்நாடு

கந்தர்வகோட்டையில் பணிமனை அமைக்கப்படுமா?

  கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  கந்தர்வகோட்டையில் காவல் நிலை

ஆர். வெங்கசேடன்

  கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 கந்தர்வகோட்டையில் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்டவை உள்ளன. தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் கந்தர்வகோட்டை வழியாகத்தான் இயக்கப்படுகின்றன.

 கந்தர்வகோட்டை வழியாக தினமும் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பகுதியைச் சுற்றி சுமார் 150 கிராமங்கள் உள்ளன.

 கந்தர்வகோட்டையிலிருந்து கறம்பக்குடி, ஆலங்குடி, புதுக்கோட்டை, கில்லுக்கோட்டை, தஞ்சாவூர், ஊரணிபுரம், செங்கிப்பட்டி, துவாக்குடி, மணமேடை உள்ளிட்ட பகுதிகளுக்கு 17 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 எனவே கந்தர்வகோட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட வேண்டும் என பலமுறை மனு அளித்தும் பலனில்லை.

 இதுகுறித்து புதுக்கோட்டை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ப. சங்கரன் கூறியது:

 கந்தர்வகோட்டை பகுதியில் 17 நகரப் பேருந்துகளும், கறம்பக்குடி பகுதியில் 7 நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், கும்பகோணம் கோட்டத்திலிருந்தும் கந்தர்வகோட்டை பகுதிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 கந்தர்வகோட்டையில் பணிமனை அமைப்பதற்கான இடங்கள் இல்லை. இடம் கொடுப்பதற்கும் இப் பகுதி மக்கள் முன்வரவில்லை. எனவே, இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பணிமனை அமைப்பதற்கு இடம் கொடுக்க முன்வந்தால், கறம்பக்குடியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளை கந்தர்வகோட்டையுடன் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 மேலும், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிப் பெற்று பணிமனை அமைக்கத் தயாராக உள்ளோம்.

 தற்போது, ஆலங்குடி, மணல்மேல்குடி, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோகி பாபுவின் 300 ஆவது படம்! விஜய் சேதுபதி வெளியிடும் முதல் பார்வை போஸ்டர்!

விடைபெற்றது 2025... பிறந்தது புத்தாண்டு 2026!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தீப்தி சர்மா சாதனை!

ராஜஸ்தானில் 150 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்! இருவர் கைது! பயங்கரவாதிகள் சதி?

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவலைக்கிடம்!

SCROLL FOR NEXT