தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 1000 பேருக்கு ஒரு மாத தொழில் முனைவோர் பயிற்சி

சென்னை, பிப்.19: தமிழகம் முழுவதும் 1,000 பேருக்கு ஒரு மாத கால தொழில் முனைவோர் பயிற்சி தமிழக அரசு, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) ஆகியவற்றின் சார்பில் வழங்கப்படவுள்ளது.  அதற்கான ஒப்பந்தம் கையெழுத்

தினமணி

சென்னை, பிப்.19: தமிழகம் முழுவதும் 1,000 பேருக்கு ஒரு மாத கால தொழில் முனைவோர் பயிற்சி தமிழக அரசு, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) ஆகியவற்றின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

 அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் உள்ள இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

 அரசு சார்பில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சிறப்பு அதிகாரி சுதீப் ஜெயின், சி.ஐ.ஐ. சார்பில் அதன் தென் மண்டல துணை குழுவின் தலைவர் பி.கே. மொஹபாத்ரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 இந்தப் பயிற்சி குறித்து சுதீப் ஜெயின் கூறியது:

 பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடித்து தொழில் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய 5 இடங்களில் மார்ச் 1 முதல் 31 வரை பயிற்சி வழங்கப்படும். அதற்கான முன் பதிவு பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

 பதிவு செய்ய விரும்புகிறவர்கள் சென்னை லயோலா கல்லூரி ஆசிரியர் பாலமோகன் (94814 22237), மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ஆசிரியர் பிரதாப் (98421 65063), கோவை கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆசிரியர் ரமேஷ் (9483001422), திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆறுமுகம் (94435 09922), திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ஆசிரியர் மனவழகன் (9443813657) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

 பதிவு செய்து கொண்டவர்களுக்கு அவர்களின் தொழில் செய்யும் ஆர்வத்தைக் கண்டறியும் வகையில் தமிழ், ஆங்கில மொழிகளில் தேர்வு நடத்தப்படும். அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்து 1000 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சியில் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

 1000 நபர்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் 700 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மற்ற பிரிவைச் சேர்ந்தவர்களில் இருந்து 300 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பயிற்சிக் கட்டணமாக பி.சி., எம்.பி.சி. பிரிவினருக்கு ரூ.6,250-ம், பொதுப் பிரிவினருக்கு ரூ.12,500-ம் வசூலிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்ளும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்! செய்திகள்: சில வரிகளில் 31.7.25 | BJP | OPS | Mkstalin

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

ஓவல் டெஸ்ட்டில் மழை குறுக்கீடு!

SCROLL FOR NEXT