தமிழ்நாடு

கால்நடை மருந்தகம் அமைவது எப்போது?

அரியலூர்  : அரியலூர் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க கடந்த 15 ஆண்டுகளாக கடுகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 22 கிராம மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், இந்தப் பகுதி மக்களின் கோரிக்கை இதுவரை ஏற்கப்ப

கு. வைத்திலிங்கம்

அரியலூர்  : அரியலூர் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க கடந்த 15 ஆண்டுகளாக கடுகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 22 கிராம மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், இந்தப் பகுதி மக்களின் கோரிக்கை இதுவரை ஏற்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவது ஏன் என்று தெரியவில்லை.

  அரியலூர் வட்டத்துக்கு உள்பட்டது கடுகூர் ஊராட்சியாகும். இந்த ஊராட்சிக்கு உள்பட்டு 7 சிற்றூர்கள் உள்ளன. கடுகூரை மையமாகக் கொண்டு, சுற்றுப் பகுதியில் அயன் ஆத்தூர், பூமுடையான்பட்டி, க. பொய்யூர், தலையாரிக்குடிகாடு, கோப்பிலியன்குடிகாடு, நுரையூர், மணக்குடி, சின்ன மணக்குடி, கல்லங்குறிச்சி, சீனிவாசபுரம், மோரக்குழி, சாளையக்குறிச்சி, கல்லமேடு, காவேரிப் பாளையம், மேட்டுப்பாளையம், சென்னிவனம், சின்ன, பெரிய ஆனந்தவாடி, கிளிமங்கலம், சின்ன கிளிமங்கலம், காவனூர், அம்பாபூர் ஆகிய 22 கிராமங்கள் உள்ளன.

   கடுகூர் உள்ளிட்ட 23 கிராமங்களில் ஆடு, மாடு, கோழி என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்தக் கால்நடைகளுக்கு ஏதேனும்  நோய்ப் பாதிப்பு ஏற்பட்டால் 12 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூருக்குத்தான்  கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது.

  மேலும், கால்நடைகளுக்கு சினை ஊசி போடுவதற்கு கொண்டு வர வேண்டியதாக இருந்தாலும் அரியலூருக்குத்தான் வர வேண்டியுள்ளது. சில நேரங்களில் நோய்வாய்பட்ட கறவை மாடுகளை சிகிச்சைக்காகக் கொண்டு வரும் போது வரும் வழியிலேயே அவை இறந்து விடுகின்றன.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

  இதையெல்லாம் கருத்தில் கொண்டு, கடுகூரில் கால்நடை மருந்தகம் அல்லது கிளை நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஊராட்சி சார்பில் அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டப்பேரவை உறுப்பினரிடமும், மக்களவை உறுப்பினரிடமும்  பொதுமக்கள் வலியுறுத்தியன்பேரில் அவர்களும் பரிந்துரைத்துள்ளனர்.

  இந்தப் பரிந்துரையின் பேரில், அரியலூரிலுள்ள கால்நடை பராமரிப்பத் துறை மண்டல இணை இயக்குநரின் பரிந்துரையுடன் சென்னையிலுள்ள கால்நடை  பராமரிப்புத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

  ஆனால், இந்தப் பரிந்துரை எல்லாம் புறந்தள்ளப்பட்டுள்ளதாகக் கடுகூர் கிராம  மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அண்மையில் கால்நடை மருந்தகம் அமைக்கப்படும் ஊர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் கடுகூர் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏன் என்று தெரியவில்லை என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

   அரியலூரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள ஒட்டக்கோவில் கிராமத்திலும், திருமானூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள கீழக்கொளத்தூர் கிராமத்திலும், கீழக்கொளத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள வடுகப்பாளையம் கிராமத்திலும் கால்நடை மருந்தகம் அமைக்கப்படும் என அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் இந்தக் கிராமங்களில் கால்நடை மருந்தகம் அமைப்பதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், 23 கிராமங்கள் பயன்பெறும் வகையில், கடுகூரில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் எனக் கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

  ஆனால், நாங்கள் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஏன் என்று  தெரியவில்லை. அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து கடுகூரில் கால்நடை மருந்தகம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அமைதிப்புறா இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் ஆ.பெ. ராஜேந்திரன்.

  தேர்தல் புறக்கணிப்புத் திட்டம்: கால்நடை மருந்தகம் அமைக்க நடவடிக்கை  எடுக்காதபட்சத்தில் விரைவில் அரியலூரில் தொடர் உண்ணாவிரதப்  போராட்டத்துக்கு 23 கிராம மக்களும் தயாராகி வருகிறோம். மேலும், மே மாதத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையும் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்கின்றனர் கடுகூர் உள்ளிட்ட கிராம மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT