முகப்பு
தமிழ்நாடு

100 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு காத்திருக்கும் ஸ்டான்லி

சென்னை, ஜூன் 5: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இப்போதுள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களை 250 எம்.பி.பி.எஸ். இடங்களாக அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் உடனடியாக ஒப்புதல் அளிக்குமா என்ற ஆர்

தமிழ்நாடு

100 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு காத்திருக்கும் ஸ்டான்லி

சென்னை, ஜூன் 5: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இப்போதுள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களை 250 எம்.பி.பி.எஸ். இடங்களாக அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் உடனடியாக ஒப்புதல் அளிக்குமா என்ற ஆர்

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:44 PM
பகிர்:

சென்னை, ஜூன் 5: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இப்போதுள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களை 250 எம்.பி.பி.எஸ். இடங்களாக அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் உடனடியாக ஒப்புதல் அளிக்குமா என்ற ஆர்வம் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இப்போது மொத்தம் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 23 எம்.பி.பி.எஸ். இடங்கள் (15 சதவீதம்) போக, தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய இடங்கள் 127. அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 39 எம்.பி.பி.எஸ். இடங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 எம்.பி.பி.எஸ். இடங்கள் என வகுப்புவாரியாக பிரிக்கப்பட்டு மொத்தம் உள்ள 127 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளிக்கும் நிலையில் தமிழக ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.

மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், உலக விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப கூடுதல் மருத்துவர்களை உருவாக்குதல் போன்ற அம்சங்களுடன் கூடிய "விஷன் 2015' என்ற சிறப்புத் திட்டத்தை இந்திய மருத்துவ கவுன்சில் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் பழைய மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். கூடுதல் இடங்களுக்கு ஆய்வின் அடிப்படையில் அனுமதி அளிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இப்போதுள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களை, 250 எம்.பி.பி.எஸ். இடங்களாக அதிகரிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல் கட்ட ஆய்வை மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் நடத்தினர். இதில் சில குறைபாடுகளை கவுன்சில் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இவற்றை கல்லூரி நிர்வாகம் நிவர்த்தி செய்ததை அடுத்து, கூடுதல் 100 எம்.பி.பி.எஸ். இட அனுமதிக்காக இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் அண்மையில் மீண்டும் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.

மாணவர்களுக்கான புதிய விடுதிகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன. மருத்துவமனைக்கான கட்டடம் பிரமாண்டமாக ரூ.75 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. பழைய வகுப்பறைகளை ரூ.57 லட்சத்தில் சீரமைத்தல் உள்ளிட்ட அனைத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்கும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளிக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →