தமிழ்நாடு

காலி மனை வரி: தமிழகம் முழுவதும் ஒரே அரசாணையைப் பின்பற்ற வேண்டும்

சென்னை, மே 3: காலி மனை வரி விதிப்பு முறையில் தமிழகம் முழுவதும் ஒரே அரசாணையைப் பின்பற்ற வேண்டும் என கட்டடப் பொறியாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு சார்பாக அதன் தலைவர் பி.பாலமுருகன் செய்

தினமணி

சென்னை, மே 3: காலி மனை வரி விதிப்பு முறையில் தமிழகம் முழுவதும் ஒரே அரசாணையைப் பின்பற்ற வேண்டும் என கட்டடப் பொறியாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பு சார்பாக அதன் தலைவர் பி.பாலமுருகன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இன்றைய காலகட்டத்தில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், மேல் நடுத்தர வர்க்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் சொந்த வீட்டுக் கனவில் வாழ்ந்து வருகிறார்கள். இதற்காக சிறுகச் சிறுகச் சேமித்து காலி மனைகளை வாங்கினாலும் அவர்களால் அந்த இடங்களில் வீடு கட்ட முடியாத சூழ்நிலையே நிலவுகிறது.

காலி மனை வரி விதிப்பு முறையில் காணப்படும் சீரற்ற தன்மையே இதற்குக் காரணம். கிராமப் பஞ்சாயத்துகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் காலி மனை வரி கிடையாது. ஆனால் நகராட்சிப் பகுதிகளில் மட்டும் காலி மனை வரி விதிக்கப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசு 2009-ம் ஆண்டு ஓர் அரசாணையை வெளியிட்டுள்ள போதிலும் நகராட்சி நிர்வாகத்தினர் அதைப் பின்பற்றாமல் அரசாணைக்கு எதிராக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு அதன்படி வரியை வசூலித்து வருகிறார்கள். சுற்றறிக்கையில் குறிப்பிடப்படும் தொகையானது அரசாணை குறிப்பிட்டுள்ள வரித் தொகையைக் காட்டிலும் சுமார் 100 மடங்கு அதிகம்.

பண பலம், அரசியல் பின்னணி உள்ளவர்கள் நீதிமன்றத்தை நாடி அரசாணையின் படி வரியைக் கட்டிவிடுகிறார்கள். ஆனால் தக்க பின்புலம் இல்லாத பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக கட்டட வரைபட ஒப்புதலைச் சமர்ப்பித்து அனுமதி பெற முடியாத நிலை உள்ளது.

மேலும் கட்டுமான பணித்துறை மற்றும் அது தொடர்பான தொழில்துறைகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக, சுய தொழில் புரியும் கட்டடப் பொறியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள்.

மேற்கூறப்பட்ட காரணங்களால் பொதுமக்கள் கட்டட வரைபட ஒப்புதல் பெறவே சில சமயம் ஒரு வருட காலம் வரை ஆகிறது. அப்படியே ஒப்புதல் பெற்றாலும் கால தாமதத்தினால் கட்டடப் பொருள்களின் இரட்டிப்பு விலை ஏற்றத்தால் பண இழப்பு மற்றும் வட்டி சதவீத உயர்வும் ஏற்படுகின்றன.

எனவே காலி வரி விதிப்பு முறையில் தமிழகம் முழுவதும் ஒரே அரசாணையைப் பின்பற்றினால் பொதுமக்களின் வீடு கட்டும் கனவு நனவாகும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்தச் சந்திப்பில் கட்டடப் பொறியாளர் அமைப்பின் செயலாளர் எஸ்.அதியமான், பொருளார் எம்.ஃபேசுர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

SCROLL FOR NEXT