முகப்பு
தமிழ்நாடு

அபாய நிலையில் மலைப்பட்டு தரைப்பாலம்!

ஸ்ரீபெரும்புதூர் கரசங்கால் சாலையில், மலைப்பட்டு பகுதியில் உள்ள தரைப்பாலம் குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. புதிய தரைப்பாலம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்காததால் வாகன ஓட்டுனர்கள் விபத்து அச்சத்தில், பழுதடைந்த தரைப்பாலத்தில் சென்று வருகின்றனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:46 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர் கரசங்கால் சாலையில், மலைப்பட்டு பகுதியில் உள்ள தரைப்பாலம் குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. புதிய தரைப்பாலம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்காததால் வாகன ஓட்டுனர்கள் விபத்து அச்சத்தில், பழுதடைந்த தரைப்பாலத்தில் சென்று வருகின்றனர்.

வண்டலூர் வாலாஜாபாத் சாலையையும், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையும் இணைப்பது ஸ்ரீபெரும்புதூர் கரசங்கால் சாலை. இச்சாலை கடந்த வருடம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் இரண்டு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதனால் இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இச்சாலை புதுப்பிக்கப்பட்டபோது, மலைப்பட்டு பகுதியில் உள்ள தரைப்பாலம் சீரமைக்கப்படவில்லை. மலைப்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த தரைப்பாலத்தில் செல்வதால், அப்பாலத்தில் பள்ளங்கள் உருவாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதையடுத்து, மலைப்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் மழை நீர், இந்த தரைப்பாலத்தின் கீழ் செல்லும் வகையில் புதிய பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் போக்குவரத்து தடைபடாமல் இருக்க பாலத்தின் அருகே மாற்றுப்பாதையையும் நெடுஞ்சாலைத்துறையினர் ஏற்படுத்தினர்.

ஆனால், இன்று வரை புதிய பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தரைப்பாலத்தில் பெரும் பள்ளங்கள் உருவாகி அபாய நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் விபத்து அச்சத்தில், இப்பாலத்தில் சென்று வருகின்றனர். எனவே புதிய தரைப்பாலம் அமைக்கும் பணியை இனியும் காலம் தாழ்த்தாது நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்க முன்வரவேண்டும் என்கின்றனர் வாகன ஓட்டுனர்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →