முகப்பு
தமிழ்நாடு

முடங்கிப் போன காவிரி நடுவர் மன்ற விசாரணை

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது எவ்வித விசாரணையும் இன்றி 5 ஆண்டுகளாக மனுக்கள் முடங்கிக் கிடக்கின்றன.

தமிழ்நாடு

முடங்கிப் போன காவிரி நடுவர் மன்ற விசாரணை

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது எவ்வித விசாரணையும் இன்றி 5 ஆண்டுகளாக மனுக்கள் முடங்கிக் கிடக்கின்றன.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:46 PM
பகிர்:

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது எவ்வித விசாரணையும் இன்றி 5 ஆண்டுகளாக மனுக்கள் முடங்கிக் கிடக்கின்றன.

காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பினை 5.2.2007 அன்று பிறப்பித்தது. அதன்படி காவிரியின் மொத்த நீர் அளவு என கணக்கிடப்பட்ட 740 டி.எம்.சி.யில் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270, கேரளத்துக்கு 30, புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழகத்துக்கு உரிய பங்கில் 192 டி.எம்.சி.யை கர்நாடகம் தர வேண்டும் என்றும் நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

மேல் முறையீடு: இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடக மற்றும் கேரள அரசுகள் நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்ததோடு, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதன் முடிவு தெரியும் வரை மறு ஆய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று அப்போதே காவிரி நடுவர் மன்றம் கூறி விட்டது. மறுபுறம் மூன்று மாநிலங்களின் மேல் முறையீட்டு மனுக்களை 2007 ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அதன் பிறகு விசாரணையே நடத்தவில்லை.

இவ்வாறு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைத் தொடர்ந்து நடுவர் மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது 5 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித விசாரணையும் இல்லாமல் மனுக்கள் முடங்கிக் கிடக்கின்றன.

விவசாயிகள் கோரிக்கை: இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து, காவிரியின் குறுக்கேயுள்ள அணைகளில் போதுமான அளவில் நீர் இருப்பு இல்லாததால் காவிரி நீர் பிரச்னை மீண்டும் சூடு பிடித்துள்ளது. ஆனால், இறுதித் தீர்வு கிடைக்க வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்திலும், நடுவர் மன்றத்திலும் முடங்கிக் கிடக்கும் மனுக்கள் உடனடியாக விசாரணைக்கு வந்தாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ். ரங்கநாதன் கூறியதாவது:

மூன்று மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்தது.

ஆனால், 5 ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. இவ்வாறு ஆண்டுக்கணக்கில் விசாரணையே இல்லாமல் வழக்கு நிலுவையில் இருப்பது காவிரிப் பிரச்னை தொடர்ந்து நீடிப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக உள்ளது.

ஆகவே, இப்பிரச்னை தொடர்பாக தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டும். மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி, வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் நடுவர் மன்ற விசாரணைக்கு தடையாக உள்ள இந்த மேல்முறையீட்டு மனுக்களையும் நடுவர் மன்றத்துக்கே மாற்றி விடும்படி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார் ரங்கநாதன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறும்போது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தவுடனேயே தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யத் தேவையில்லை என்பதும், நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தால் மட்டுமே போதுமானது என்பதுதான் பெரும்பாலான கட்சிகளின் கருத்தாக இருந்தது. எனினும் அன்றைய அரசியல் சூழல் காரணமாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களே காவிரி நடுவர் மன்ற விசாரணைக்கு இப்போது தடங்கலாக உள்ளதால், அந்த தடங்கலை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரின் அளவு குறைவாக இருக்கலாம். எனினும் இதையாவது உறுதிப்படுத்திட வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

நடுவர் மன்றத் தலைவர்: இதனிடையே கடந்த ஏப்ரல்முதல் காவிரி நடுவர் மன்றத் தலைவர் பதவி காலியாக உள்ளது. ஆகவே, புதிய தலைவரை பிரதமர் உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →