தமிழ்நாடு

கவிஞர் இந்திரனுக்கு சாகித்ய அகாதெமி விருது

புதுச்சேரி, பிப். 22: கவிஞரும், மொழி பெயர்ப்பாளருமான இந்திரனுக்கு 2011-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருது கிடைத்துள்ளது.  ÷பறவைகள் ஒருவேளை தூங்கி போயிருக்கலாம் என்ற மனோரா பிஸ்வால்

தினமணி

புதுச்சேரி, பிப். 22: கவிஞரும், மொழி பெயர்ப்பாளருமான இந்திரனுக்கு 2011-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருது கிடைத்துள்ளது.

 ÷பறவைகள் ஒருவேளை தூங்கி போயிருக்கலாம் என்ற மனோரா பிஸ்வால் மஹபத்ராவின் ஒரிய மொழி கவிதைகளின் மொழி பெயர்ப்புக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இதில் 8 கவிதை நூல்கள், 9 மொழி பெயர்ப்பு நூல்களும், 10 கலை விமர்சன நூல்களும் அடங்கும். அறைக்குள் வந்த ஆப்ரிக்க வானம் என்றஇவரது நூல் பலரது பாராட்டுக்களைப் பெற்றது. ÷இந்திய இலக்கியம், மராத்தி, குஜராத்தி தலித் இலக்கியங்களையும், ஆதிவாசி கவிதைகளையும், மூன்றாம் உலக இலக்கியங்களையும் இவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற கவிஞர் இந்திரனை முதல்வர் ரங்கசாமி கௌரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய கீதம் போன்று... தேசிய பாடலுக்கு இடம் கொடுக்கவில்லை: ராஜ்நாத் சிங்

ஜூனியர் என்டிஆருக்கு இப்படியொரு சோதனையா? நீதிமன்றத்தில் முறையீடு!

சன்டே ஸ்பெஷல்... தீபிகா படுகோன்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.90.09 ஆக நிறைவு!

தமிழகத்தில் 99.27% எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்!

SCROLL FOR NEXT