முகப்பு
தமிழ்நாடு

குறைந்துவரும் வீராணம் ஏரி நீர்மட்டம்: விவசாயிகள் கவலை

சிதம்பரம், ஜூன் 14: மேட்டூரிலிருந்து நீர் திறந்துவிடப்படாததால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்கா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

சிதம்பரம், ஜூன் 14: மேட்டூரிலிருந்து நீர் திறந்துவிடப்படாததால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்கா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

 ÷கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும் (1465 மில்லியன் கனஅடி). ஆனால் ஏரியில் தற்போது வியாழக்கிழமை நிலவரப்படி 41.90 அடிதான் (327 மில்லியன் கனஅடி) நீர் உள்ளது.

 சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 38 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் 40 அடிக்கும் கீழ் குறைந்தால், நீரேற்றி அனுப்ப முடியாததால் சென்னை குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் நிலை ஏற்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 ÷கடந்த ஜூன் 6-ம் தேதி மேட்டூரில் நீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இந்த ஆண்டு இன்று வரை மேட்டூரிலிருந்து நீர் திறந்துவிடப் படாதததால் காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

 ÷இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தெரிவித்தது: கடும் மின்வெட்டு, நீர் பற்றாக்குறையால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் போனது.

 இப்போது கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் முன்கூட்டியே நீர் திறந்துவிட்டால் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் இருந்தனர். ஆனால் இதுநாள் வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. மின்சப்ளை இருந்தால் போர்வெல் மூலம் முன்கூட்டியே விதை விடும் பணியை தொடங்கலாம். மின்வெட்டு, நீர் இல்லாததால் தற்போது சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகிவிட்டது என வேதனையுடன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.