தமிழ்நாடு

பராமரிக்கப்படாத விளையாட்டு மைதானம்

கடலூர், மே 21: கடலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டு மைதானம், முறையாகப் பராமரிக்கப்படாததால் மைதானத்தில் வீரர்கள் அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர்.  ÷இந்த மைதானத்தின் ஒரு பகுதி தலைவர

ஜீவ. இராம ஸ்ரீநிவாஸன்

கடலூர், மே 21: கடலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டு மைதானம், முறையாகப் பராமரிக்கப்படாததால் மைதானத்தில் வீரர்கள் அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர்.

 ÷இந்த மைதானத்தின் ஒரு பகுதி தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்கள், அரசு மற்றும் தனியார் பொருட்காட்சிகள் நடத்த ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அண்ணா விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இதில் வாலிபால், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள், மாவட்ட அளவில் நடைபெறும் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடக்கும்.

 இத்தகைய பெருமைவாய்ந்த அண்ணா விளையாட்டு மைதானத்தை ரூ.50 லட்சம் செலவில் (புயல் நிவாரண நிதி) சீரமைக்க மாவட்ட ஆட்சியர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் ரூ.3 லட்சம் செலவில் கால்பந்து விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் மணல் கலந்த சவுடுமண் அடிப்பதற்கு பதில், சாலை போட பயன்படுத்தப்படும் சரளை கற்களை (கிராவல்) மைதானத்தில் கொட்டியதாகக் கூறப்படுகிறது. ÷ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஏற்ற வகையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும். மைதானத்தில் விளையாடுவதற்கு லாயக்கற்ற கிராவல் மண்ணை கொட்டி சமன்படுத்தியுள்ளனர். ஆனால் இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எனவே வீரர்கள் காயம் படாமல் இருக்கும் வகையில் மறுசீரமைப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.

 ÷இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகத்திடம் கேட்டதற்கு, "மாவட்ட ஆட்சியரிடம் புயல் நிவாரண நிதியில் ரூ.3 லட்சம் பெற்று, 110 மீட்டர் நீளம், 90 மீட்டர் அகலம் உள்ள கால்பந்து மைதானத்தை சீரமைத்துள்ளோம். புல்டோசர் வைத்து சமன்படுத்தி, செம்மண் கொட்டி உழவு செய்து சுமார் 40 லாரிகள் தண்ணீர் ஊற்றி ரோலர் ஓட்டி முறையாக மைதானத்தை அமைத்து வைத்துள்ளோம். விளையாட்டில் கீழே விழுந்தால் காயம் ஏற்படதான் செய்யும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT