முகப்பு
தமிழ்நாடு

கப்பல் சிப்பந்திகள் உயிரிழப்புக்கு யார் காரணம்?

சென்னை மெரினா கடற்கரை அருகே தரை தட்டிய கப்பலில்

தமிழ்நாடு

கப்பல் சிப்பந்திகள் உயிரிழப்புக்கு யார் காரணம்?

சென்னை மெரினா கடற்கரை அருகே தரை தட்டிய கப்பலில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

சென்னை மெரினா கடற்கரை அருகே தரை தட்டிய கப்பலில் பணியாற்றிய 6 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்துக்கான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

நிலம் புயலின்போது நடுக்கடலில் நின்ற எம்.டி. பிரதீபா காவேரி என்ற எண்ணெய்க்  கப்பலில் இருந்து உயிர் காக்கும் படகு மூலம் தப்பிக்க முயற்சித்த 22 சிப்பந்திகளில் 6 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய தலைமை அலுவலகம், இந்திய கடற்படையின் அலுவலகமான ஐ.என். எஸ். அடையாறும் அமைந்துள்ள இடத்தின் அருகேயே இச் சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீட்கப்பட்ட 16 பேரில் 5 பேர் மட்டும் தானாகவே நீந்தி கரையை அடைந்துள்ளனர். மீதி 11 பேரை கடலோரக் காவல் படையினர் காப்பாற்றாமல் கைவிட்ட நிலையில், மீனவர்கள்தான் அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.  

புயல் சமயம்: நிலம் புயலின்போது கப்பலைக் காப்பாற்றும் முயற்சியில் கப்பலின் கேப்டன் மற்றும் தகவல் தொடர்பு அலுவலரும் ஈடுபட்டுள்ளனர். 

ஆனால் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில்தான் அபாய நிலை குறித்து கேப்டன் அறிவித்ததாகவும் அதன் பிறகே உயிர்காக்கும் படகு மூலம் தப்பிக்க முயற்சி மேற்கொண்டதாகவும் உயிர் தப்பியவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சென்னைத் துறைமுகம் வட்டாரத்தில் விசாரிக்கையில், "கடல் கொந்தளிப்பில் சிக்கிய நேரம் இழுவைக் கப்பல்களை அனுப்பும்படி காவேரி கப்பலில் இருந்து உதவிக் கேட்டு தொடர்பு கொண்டது உண்மைதான். கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டதால் இழுவைக் கப்பல்களை இயக்க மாலுமிகள் மறுத்துவிட்டனர்' என்று கூறுகின்றனர். அதனால் அனுப்ப முடியவில்லை என்கின்றனர். 

கப்பலின் அபாய நிலை குறித்து கிழக்குக் கடலோரக் காவல் படையினருக்கு சென்னை துறைமுக அதிகாரிகள் தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர்.  

புதுதில்லியில் உள்ள கப்பல்துறை அமைச்சகம் சார்பிலும் இந்திய கடலோரக் காவல்படையின் தலைமையகத்திற்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக துறைமுக அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட கடலோரக் காவல் படையினர், "கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டாலும் கப்பலில் உள்ளவர்களுக்கு ஆபத்து இல்லை. புயல் கரையைக் கடக்கும் வரை அவர்கள் கப்பலிலேயே இருக்கட்டும்' என்று கூறியுள்ளனர். அதனை மீறித்தான் ஊழியர்கள் தப்பிக்க முயன்று உயிரிழந்துள்ளனர் என துறைமுகத் தரப்பில் கூறப்படுகிறது.

உறுதியின்மை: மும்பையில் உள்ள கடல்சார் வாணிபத்துறை உயர் அதிகாரி கூறுகையில், விபத்தில் சிக்கிய இக்கப்பலின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களாகவே முயற்சி செய்து வந்தோம். ஆனால் கப்பல் நிறுவனத்தினர் பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி காலம் தாழ்த்தி வந்தனர். அதனால் ஆய்வு செய்ய முடியவில்லை' என்கின்றனர்.  கப்பல் நிறுவனத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாலேயே ஆய்வு செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையினர் அவ்வப்போது செய்தியாளர்களை நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று புயலில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டுவது வழக்கம்.

ஆனால் கண்ணெதிரில் நடந்த கோரச் சம்பவத்தில் 6 பேர் பலியானதைப் பார்க்கும்போது செயல் விளக்கத்தின்போது காட்டப்படும் ஆர்வம் நிஜத்தில் இல்லை என்பதே உண்மை.

முழு கட்டுரையைப் படிக்க →