முகப்பு
தமிழ்நாடு

இடிந்து விழும் அபாயத்தில் குடிநீர் தொட்டி!

வல்லம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:30 PM
பகிர்:

வல்லம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றி விட்டு புதிய நீர்தேக்கத் தொட்டி கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் மேல்சித்தாமூர் ஊராட்சியில் சுமார் 2,250 பேர் வசிக்கின்றனர். தற்போது இக்கிராமத்தில் உள்ள 6 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் திறந்த வெளி கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் குடிநீர் பாதுகாப்பற்றதாக உள்ளது. மேலும் மேடான பகுதிகளுக்கு இக்குடிநீர் சென்றடைவதில்லை. இதனால் சாலையில் பள்ளம் தோண்டி குடிநீரை பெறும் அவநிலை உள்ளது.

மேலும் மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் மழை தேங்கி குடிநீருடன் கலந்து விடுகிறது. பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இக்குடிநீரை அருந்துவதன் மூலம் தொற்று நோய்கள் ஏற்படலாம் என கிராம மக்கள் அச்சம் தெரிவிக்

கின்றனர்.   எனவே பயனற்ற நிலையில் உள்ள பழுதடைந்து காணப்படும் இடித்து அகற்றி விட்டு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியை கட்டிதர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து

ள்ளனர்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் தெரிவித்தது:  சித்தாமூரில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட தொட்டி 1988-ல் கட்டப்பட்டது. அப்போதைய குடிநீர் வடிகால் வாரியத் தலைவராக இருந்த திண்டிவனம் ஹீராசந்த், சேவூர் ஆற்றில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் வல்லம், மேல்சித்தாமூர் ஆகிய கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் வல்லத்தில் இருந்து மேல்சித்தாமூர் கிராமத்திற்கு வரும் பைப் லைன்கள் பழுது ஏற்பட்டதால் குடி நீர் வரத்து தடைபட்டது. இதனால் கடந்த 10 வருடமாக சேவூர் ஆற்றில் இருந்து மேல்சித்தாமூருக்கு தண்ணீர் வரத்து தடைபட்டது.

இந்நிலையில் மேல்சித்தாமூரில் உள் 3 திறந்த வெளி கிணறுகள் மூலம்  தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் குடிநீர் தொட்டியும் பழுதுபட்டதால் கடந்த 4 ஆண்டுகளாக நேரடியாக குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. குடிநீர் தொட்டியில் உள்ள கம்பிகள் துருபிடித்து அதன் கால்கள் வலுவிழந்து இடிந்து நிலையில் உள்ளது. இதன் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு புதிய மேல்நிலை தொட்டியை கட்டிதர  குடிநீர் வடிகால் வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஒரு குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆனால் தான் அதனை இடித்து விட்டு வேறு ஒரு தொட்டியைக் கட்ட முடியும். 

ஆனால் ஆவணத்தில் 1995-ல் குடிநீர் தொட்டி கட்டப்பட்டதாக தவறாகப் பதிவாகி இருப்பதால், கட்டி முடிக்கப்பட்டு 17 ஆண்டுகளே ஆகிறது. எனவே அதை இடிக்க முடியாது எனத் தெரிவிக்கின்றனர். 

குடிநீர் வடிகால் வாரியத்தினரால் தவறாகச் செய்யப்பட்ட பதிவால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் நிலவுகிறது. எனவே முறையான ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டு இக்கிராமத்திற்கு புதிய 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியைக் கட்டி ஏற்படுத்தி, மீண்டும் சேவூர் ஆற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →