முகப்பு
தமிழ்நாடு

சாக்கடையாக மாறிய "சர்வீஸ்' சாலை

கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில்

தமிழ்நாடு

சாக்கடையாக மாறிய "சர்வீஸ்' சாலை

கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பாலகிருஷ்ணாபுரம் அருகே சர்வீஸ் சாலை சாக்கடை சாலையாக மாறி பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

÷கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியானது ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இடமாகும். இப்பகுதியில் உள்ள பாலகிருஷ்ணாபுரம், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாக்கடை நீர் நதிபோல தேங்கிக் கிடக்கிறது.÷ஆரம்பத்தில் சிறிய ஓடை போல சர்வீஸ் சாலையில் ஓடிய சாக்கடை நீர், இப்போது நதி போல சாலை முழுக்க ஓடுகிறது. கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் முதல் ம.பொ.சி. நகர் வரை சாலையோரம் தேங்கியுள்ள இந்த சாக்கடையால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

÷இது குறித்து பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனை கேட்டபோது, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்த சர்வீஸ் சாலையை ஒட்டி கால்வாய் அமைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சாக்கடை கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சர்வீஸ் சாலை முழுக்க வழிந்தோடுகிறது. மேலும் சர்வீஸ் சாலையின் கழிவுநீர் கால்வாயிலிருந்து கழிவுநீர் வெளியேறி மழைக் காலங்களில் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தெருக்களில் ஓடி பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது என்றார்.

÷இதுகுறித்து புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் மா.செல்வராஜை கேட்டபோது, கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையை ஒட்டி சர்வீஸ் சாலையில் கடந்த ஓராண்டாக கழிவுநீர் தேங்குவது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் பல முறை புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

÷இது குறித்து இப்பகுதி மக்களிடம் கேட்டபோது, பொது சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் இந்த சாக்கடை சாலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் எவ்வித பயனுமில்லை. ஏற்கெனவே சாக்கடை வழிந்தோடும் சாலையில் சாலையை ஒட்டிய கடைகாரர்கள் கொட்டும் குப்பைகளால் சாக்கடைகள் துர்நாற்றம் எடுத்து அவ்வழியே போவதற்கு இடையூறாய் இருக்கிறது. இரவு நேரங்களில் சாக்கடை நீர் தேங்கிய பள்ளங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவமும் அடிக்கடி நடப்பதாக தெரிவித்தனர்.÷தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சாக்கடை சாலையை சீரமைப்பதில் அலட்சியம் காட்டிவரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைத்து கழிவுநீர் கால்வாய்களை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறையினரை வலியுறுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →