சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன முன்பதிவு திட்டம்: இந்த ஆண்டும் தொடர்கிறது
சபரிமலை ஐயப்பன் கோவில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "அட்வான்ஸ் கியூ பிளேஸ்மெண்ட் கூப்பன்' திட்டம் இந்தாண்டு "விர்ச்சுவல் கியூ கூப்பன்' (யண்ழ்ற்ன்ஹப் ண இர்ன்ல்ர்ய்) என்ற பெயரில் தொடர்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "அட்வான்ஸ் கியூ பிளேஸ்மெண்ட் கூப்பன்' திட்டம் இந்தாண்டு "விர்ச்சுவல் கியூ கூப்பன்' (யண்ழ்ற்ன்ஹப் ண இர்ன்ல்ர்ய்) என்ற பெயரில் தொடர்கிறது.
÷இந்தத் திட்டத்தை கேரள மாநில காவல்துறை கடந்த ஆண்டு முதல் தங்களது
ஜ்ஜ்ஜ்.ள்ஹக்ஷஹழ்ண்ம்ஹப்ஹ.ந்ங்ழ்ஹப்ஹல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் வாயிலாக செயல்படுத்தி வருகிறது.
Advertisement
இந்தாண்டு சபரிமலையில் மண்டல பூஜை நவம்பர் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நாளிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படும். இதையொட்டி கார்த்திகை மாதம் முதல் நாள் (நவம்பர் 17-ம் தேதி) முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும். ஆண்டுக்கு ஆண்டு சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சுவாமி தரிசனத்துக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்ப்பதற்காக கடந்த ஆண்டு கேரள மாநில காவல் துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டதே "அட்வான்ஸ் கியூ பிளேஸ்மென்ட் கூப்பன்' அல்லது "வெர்ச்சுவல் கியூ கூப்பன்' திட்டம்.
எப்படி பயன்படுத்துவது?: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்துக்காக செல்லும் பக்தர்
கள் ஜ்ஜ்ஜ்.ள்ஹக்ஷஹழ்ண் ம்ஹப்ஹ.ந்ங்ழ்ஹப்ஹல்ர்ப்ண்ஸ்ரீங். ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்களுடைய பெயர் மற்றும் முகவரியுடன் புகைப்படத்தையும் "வெர்ச்சுவல் கியூ கூப்பன்' திட்ட இணையத்தில் பதிவு செய்யவேண்டும்.
முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் கூப்பன் ஆகியவற்றுடன், பதிவு செய்யப்பட்ட அரைமணி நேரத்துக்கு முன்பாக சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐய்யப்பன் கோவிலின் பதினெட்டாம் படியை ஏறி சுவாமி தரிசனம் செய்து விடலாம்.
காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த முன்பதிவு வசதியைப் பெற்று சுவாமி தரிசனம் செய்யலாம். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம். இந்தத் திட்டத்துக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது சிறப்பம்சம். இந்தாண்டு நவம்பர் 16 முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லவுள்ள பக்தர்கள் இப்போது இணையத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பிராந்திய மொழிகளில்...: இந்த இணையதளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளிலும் தகவல்கள் உள்ளன. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜையின்போது அதிகமாகச் செல்லும் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு இந்த இணையதளம் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த இணையதளம் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு உடனுக்குடன் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை தகவல்களாக தந்துகொண்டே இருக்கும்.
வாகனங்கள் நிறுத்துமிடம்: சபரிமலை யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு வாகனங்களை எங்கெங்கு நிறுத்தலாம் என்ற முன்னெச்சரிக்கையும் இந்த இணையதளத்தில் அவ்வப்போது தெரிவிக்கப்படும். சபரிமலைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடமான நிலக்கல், சக்குபாலம்-1, சக்குபாலம்-2, திரிவேணி, ஹில்டாப் ஆகிய இடங்களில் எவ்வளவு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்ற தகவல்களும் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
வரிசையின் நீளம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பம்பையில் இருந்து சென்றால் எவ்வளவு நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற தகவலும் இணையத்தில் வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் மலை ஏறும்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவிப்பும் வந்துகொண்டே இருக்கும்.
இந்த பிரத்யேக இணையதளத்தில் இவற்றைத் தவிர கேரள மாநிலக் காவல்துறை சபரிமலையில் ஆற்றும் பணிகள், பக்தர்கள் மலையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள், தொலைந்துபோன பொருள்கள் குறித்த புகார்கள் தெரிவிக்கும் இடங்கள், வானிலை நிலவரங்கள், சபரிமலை சன்னிதானத்தை அடைவது எப்படி, மருத்துவச் சேவைகள், அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதனால் கேரள மாநிலக் காவல்துறை வடிவமைத்துள்ள இந்த இணையதளம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் அனைத்து பக்தர்களிடையே கடந்தாண்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தாண்டு முன்கூட்டியே இந்த இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.