42 மழலையர் பள்ளிகளுக்குத் தடை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள 42 மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள 42 மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இதில் சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் செட்டிநாடு ஏ பள்ளி என்ற பெயரில் 10 பள்ளிகள் அங்கீகாரமே இல்லாமல் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 324 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 44 பள்ளிகள் எவ்வித அனுமதியும் இல்லாமல் செயல்பட்டது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. ÷இதைத் தொடர்ந்து அப்பள்ளிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு 3 முறை நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் 2 பள்ளிகள் மட்டும் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில் அங்கீகாரம் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
தடை செய்யப்பட்ட மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்: காஞ்சிபுரம் வெற்றிவேல், ஐயங்கார்குளம் இந்திரா ஆங்கிலப்பள்ளி, காஞ்சிபுரம் சிவா உண்ணா கல்வி நிலையம், வாலாஜாபாத் அடுத்த வையாவூர் ஷெப்பர்ட் பள்ளி, பரந்தூர் ஸ்ரீ யோகி அமிர்த பாரதி, ÷ஆர்ப்பாக்கம் கிரேஸ் கார்மல், ஸ்ரீபெரும்புதூர் ஓ.எம். மங்கலம் லட்சுமி நாராயணா பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் கப்பன்கோட்டூர் ஸ்ரீ லட்சுமி நாராயணன், மொளச்சூர் நடராஜ் வித்யாலயா, படாளம் நியூ ரிவர், மதுராந்தகம் வி.கே. பள்ளி, கோவூர் அய்யப்பன் வித்யாலயா, திருமுடிவாக்கம் எஸ்.ஏ.வி.எம். நர்சரி, திருப்போரூரை அடுத்த மானாம்பதி அழகப்பா, சென்னை நடுவீரப்பட்டு செயின்ட் பால் நர்சரி, சென்னை வெட்டுவாங்கேணி ஜெபா, ÷சென்னை மடிப்பாக்கம் எஸ்.வி.ஆர். நர்சரி, தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் கே.வி.என். வேதகிரி, சென்னை இரும்புலியூர் பத்மாவதி பப்ளிக் பள்ளி, மேற்கு தாம்பரம் கடப்பேரி டேனியல் நர்சரி பள்ளி,
மேற்கு தாம்பரம் ராமகிருஷ்ணா நர்சரி, நீலாங்கரை ஈஸ்ட் கோஸ்ட், அனகாபுத்தூர் பல்லவா நர்சரி, மேற்கு தாம்பரம் கதிர் நர்சரி, செங்கல்பட்டு மேலையூர் பாக்கியநாதன் நர்சரி, காயாரம்பேடு பமிதி நர்சரி, குன்றத்தூர் பூந்தண்டலம் சாய்ராம் நர்சரி, ÷குரோம்பேட்டை செட்டிநாடு ஏ பள்ளி, செம்பாக்கம் செட்டிநாடு ஏ பள்ளி, மடிப்பாக்கம் செட்டிநாடு ஏ பள்ளி, மேற்கு தாம்பரம் செட்டிநாடு ஏ பள்ளி, சென்னை செந்தில்நகர் ஏ பள்ளி, நங்கநல்லூர் செட்டிநாடு ஏ பள்ளி, பல்லாவரம் செட்டிநாடு ஏ பள்ளி, பள்ளிக்கரணை எஸ். கொளத்தூர் செட்டிநாடு ஏ பள்ளி,
பெருங்குடி செட்டிநாடு ஏ பள்ளி, திருவான்மியூர் செட்டிநாடு ஏ பள்ளி, காட்டாங்கொளத்தூர் பாண்டூர் மாடன் செக்யூலியர், பேரமனூர் உஷா நர்சரி, நந்தம்பாக்கம் காந்தியம்மாள் நினைவு நர்சரி, ஊரப்பாக்கம் வெங்கடேஷ்வரா நர்சரி, ஜமீன் பல்லாவரம் எலிசபெத் நர்சரி பள்ளி.
அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 விதிகள் 2011-ன் படி தொடர் அங்கீகாரம் இன்றி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் செயல்படக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள 42 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் ஆரம்ப அங்கீகாரமே இல்லாமல் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம். இப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளலாம். இது தொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை பெற்றோர்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.