தமிழ்நாடு

மாணவர்கள் படிப்பில் வேகத்தை காட்ட வேண்டும் : சாலையில் காட்டக்கூடாது

  மாணவர்கள் படிப்பில் வேகத்தை காட்ட வேண்டுமே தவிர, சாலையில் காட்டக்கூடாது என்று ஆம்பூர் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் கணேசன் கூறினார்.

எம். அருண்குமார்

  மாணவர்கள் படிப்பில் வேகத்தை காட்ட வேண்டுமே தவிர, சாலையில் காட்டக்கூடாது என்று ஆம்பூர் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் கணேசன் கூறினார்.

ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிமை நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது, 18 வயது நிறைவடைந்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது.  அவர்கள் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். சாலையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வது, செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் சாலை விபத்து ஏற்படுகிறது.  ஆகவே சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படுமென அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜமன்னன் தலைமை வகித்தார்.  நிர்வாக அலுவலர் ஹிரானி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பலராமன், வடிவேலு குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.   போக்குவரத்து விதிகள் அடங்கிய கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT