காலிப்பணியிடங்களை நிரப்ப கிராம சுகாதார செவிலியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
பழனி உடுமலை சாலையில் படையாட்சிகள் மடத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் பாப்பா
தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழனி உடுமலை சாலையில் படையாட்சிகள் மடத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் பாப்பா வரவேற்புரை நிகழ்த்தினார்.பழனி சுகாதார மாவட்ட தலைவர் விஜயசாமுண்டீஸ்வரி, செயலாளர் பத்மாவதி, பாண்டிதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர் அந்தோணியம்மாள், மாநில இணை செயலாளர் மரியச்செல்வம், மாநில பொருளாளர் மரியஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில தலைவர் நிர்மலா சிறப்பு அழைப்பாளராக கூட்டத்திற்கு தலைமை வகித்து தலைமை உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து செவிலியர் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள துணை செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஆரம்பசுகாதார நிலையங்களில்தான் பிரசவம் நடைபெறவேண்டும் என்ற கட்டாயப்படுத்துதலை கைவிடவேண்டும், மூடப்பட்ட துணை செவிலியர் பயிற்சி மையங்கள் அனைத்தும் உடனடியாக திறக்கப்பட வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் நியமனம் செய்யப்படவேண்டும், பெண் ஊழியர்கள் என்பதை கருத்தில் கொண்டு பணிப்பளு திணிப்பதையும், பணியில் மூத்தோர் ஊதிய முரண்பாடு, பதவி உயர்வு, ஊட்டச்சத்துப்பணியாளர்களின் பணிக்காலத்தை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ரெமா, இணைச் செயலாளர்கள் தனலட்சுமி, தேனமொழி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.