தமிழ்நாடு

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்: 600 பேர் கைது

விருதுநகரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை

எஸ். பாண்டியன்

விருதுநகரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 550 பெண்கள் உள்பட 600 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கதத்தின் மாவட்ட தலைவர் முனியசாமி,அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அங்கம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்புக்காளை,அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகனவள்ளித்தாயார் ஆகியோர்சாலை மறியல் போராட்டம் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.

மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லியாகத் அலி, சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட பொருளாளர் பாத்திமாமேரி நன்றி கூறினார்.

இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவும், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்கவும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவும், உணவு செலவு மானியத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தி வழங்குதல்,சத்துணவு திட்டத்தில் புதிய நியமனத்தின் போது 50 சதவீதம் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வழிச்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில்  உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை போலீஸார் 50 ஆண்கள் உள்பட 600 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் 4 வழிச்சாலையில் அரை மணிநேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

SCROLL FOR NEXT