திமுக முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் அதிமுகவில் இணைந்தார்
பழனி நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்கேகே.ஹக்கீம். இவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த பல வருடங்களான நிலையில் திமுக சார்பில் முன்னாள் நகர்மன்ற தலைவராக
பழனி முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் திமுகவில் இருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
பழனி நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்கேகே.ஹக்கீம். இவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த பல வருடங்களான நிலையில் திமுக சார்பில் முன்னாள் நகர்மன்ற தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும், மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராகவும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் திமுகவில் இருந்து விலகி தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திங்கள்கிழமை பழனி சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபாலு மற்றும் பலரிடம் நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்த மட்டிலும் திமுகவில் கட்சிப்பணியாற்றிய ஏராளமானோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதியதாக பதவி வழங்கவுள்ளோர் சரியாக பணி செய்வார்களா என தெரியவில்லை. மேலும், மாவட்டத்தை பிரிப்பதிலும் சரியான முறை பின்பற்றப்படவில்லை. ஆகவே, இந்த தருணத்தில் திமுகவில் இருப்பது சரியல்லை என்று எண்ணியதால் அதிமுகவான எனது தாய்க்கழகத்துக்கு வந்துவிட்டேன் என தெரிவித்தார்.