சிதம்பரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 13 பேர் படுகாயம்: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ நேரில் ஆறுதல்
சிதம்பரம் அருகே அரகு பேருந்து கவிழ்ந்து 13 பேர் படுகாயம் அடைந்து சிதம்பரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.
சிதம்பரம் அருகே அரகு பேருந்து கவிழ்ந்து 13 பேர் படுகாயம் அடைந்து சிதம்பரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்திற்கு அரசு நகர பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை காலை சென்றது. அப்போது நவாப்பேட்டை அருகே சென்ற போது சாலையில் உள்ள பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறும் போது பேருந்து எதிர்பாராத விதமாக தலைகுப்பற கவிழ்ந்தது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த ஆனந்தி, பாலசண்முகம், மாயவன், நம்பியாண்டார், ஆறுமுகம், பரமேஸ்வரி உள்ளிட்ட 13 பேர் படுகாயம் அடைந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார். எம்எல்ஏவுடன் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.